கோயில்களுக்கு எதிரான வசனம் – விஜய்க்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்!

0
1118

அதில் “சமீபத்தில் மெர்சல் திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தில் நடிகர் விஜய் கோயில்களுக்குப் பதிலாக ஆஸ்பத்திரிகள் கட்டலாம் என்று கூறியுள்ளார்.
mersal
இது முற்றிலும் இந்து மதத்துக்கு விரோதமானது ஆகும். திரைப்படங்களை நல்லவிதமாக நம்பிதான் பார்க்கச் செல்கின்றனர். ஆனால், கோயில்களை வெறுக்கும் விதமாகவும், இனிமேல் கோயில்கள் உருவாக்கக் கூடாது என்றும் தேவாலயம், மசூதி உள்ளிட்டவற்றை மட்டும் இந்தியாவில் இடம் பெற வேண்டும் என உள்நோக்கத்துடன் பேசியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் முடிவான ஜி.எஸ்.டி வரியைப் பற்றி எதிராகப் பேசியுள்ளார். சிங்கப்பூரில் கல்வி, மருத்துவம் இலவசம் என்று பொய்யான கருத்துகளை அடுக்கியுள்ளார். இவ்வாறு பலவற்றைக் கூறுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இளைய தலைமுறையை தேசத்துக்கு எதிராக பொய்க் கருத்துகளை பரப்பி, படத்தின் மூலம் வன்முறை செய்யத் தூண்டுகிறார். விஜய், சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட படத்தில் வேலை செய்த பலரும் திரைப்பட ஒத்திகை என்ற கூட்டு சதி செய்துள்ளனர். எனவே, விஜய் மற்றும் அப்படத்தில் எழுத்து வசனம், நடிப்பு என்று கூட்டு சதி செய்த மொத்தம் 10 நபர்கள், விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” ன தெரிவித்துள்ளார்.