இனிமேல் அவர் எங்கள் கட்சிகாரராக கருதப்படுகிறார். அஜித்தின் அறிவுறுத்தலின்படி வெளியான அறிக்கை.

0
12699
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித், சமூக வலைதளத்தில் சேரப்போவதாக நேற்று ஒரு அறிக்கையின் கடிதம் ஒன்று வைரலாக பரவியது. என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களைப் பலமுறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன்மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதனைக் காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பார்த்து அஜித் ரசிகர்கள் பலரும் உண்மை என நம்பி மகிழ்ச்சியடைந்தனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : அஜித் ஒரு அழுகு சுந்தரன், கெத்தா இருப்பார்னு நெனச்ச.ஆனால், அஜித் பட நடிகை பேட்டி.

இந்த நிலையில் இதுகுறித்து அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடபட்டுள்ளது. அதில், நடிகர் அஜித் குமார் அவர்களின் சட்ட ஆலோசகர் நாங்கள் (இனிமேல் அவர் எங்கள் கட்சிகாரராக கருதப்படுகிறார்) மேலும், இந்த நோட்டீசை அவரது அறிவுறுத்தலின் பேரில் மற்றும் அவரது சார்பாகவும் நாங்கள் வெளியிடுகிறோம். மார்ச் 6 2020 தேதியில் அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில் சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது அந்தக் கடிதம் அஜித் குமார் அவர்கள் கையெழுத்துடன் ஒரு போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு. மேலும், அவரது கைலயெழுத்து இணைத்திருப்பதை இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சி அளிக்கிறது.

-விளம்பரம்-

அந்த கடிதம் அஜித்குமார் அவர்களால் வெளியிடப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்த கருத்துக்கள் யாவும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவித்த அவர், தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பினார். அஜித் குமார் கடந்த காலத்தில் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு எந்த ஒரு சமூக ஊடக கணக்குகளும் இல்லை என்றும் சமூக ஊடகங்களில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பல முறை தெரிவித்துள்ளார். அஜீத் குமார் கீழ்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.

அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக எனக்கு எதுவும் இல்லை,அவர் எந்த சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை,மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப் போவதாக கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.இறுதியாக தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியை கண்டு பிடிப்பதற்கு தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்ட விரும்புகிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement