அட, லெஜண்ட் அருளுக்கு தமிழிசை இப்படி ஒரு உறவினரா ? வைரலாகும் தகவல் இதோ.

0
321
legend
- Advertisement -

‘பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்டு’ என்று இப்படி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விளம்பரம் தான் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம். தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை. ஜவுளி முதல் வீட்டு உபயோக சாதனம் வரை என பல பொருட்கள் உள்ள கடை தான் சரவணா ஸ்டோர்ஸ். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் .பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் பேஸ்டு கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருந்தார் அருள்.

-விளம்பரம்-
Legend saravana stores

இந்த விளம்பரத்தில் நடித்த சரவணா அருளை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து இருந்தார்கள்.இருந்தாலும் அவர் அசராமல் ஹன்சிகா, தமன்னா என்று பல நடிகைகளுடன் நடனமாடி இருந்தார். விளம்பரத்தில் கலக்கிய நம்ம சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இரட்டை இயக்குனர் ஜேடி- ஜெர்ரி தான் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

தி லெஜண்ட் :

தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகியது. தமிழில் தயாரான இந்த படம் தற்போது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானி பான் இந்திய படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஹீரோ என அறிமுகமாகும் அருள் சரவணன் இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்துவருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்தவர் ‘சரவணா செல்வரத்தினம்’. இவர் தன்னுடைய கடுமையான உழைப்பால் இந்த அளவிற்கு வாழ்வில் உயர்ந்து உள்ளார். மேலும், சரவணா செல்வரத்தினத்தின் மகன் தான் சரவணன் அருள். சரவணன் அருள் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். முதலில் ஜவுளி கடையில் ஆரம்பித்து தற்போது நகைக்கடை என பல ஊர்களில் கிளைகளைத் தொடங்கி பிரபலமாகி உள்ளார்கள்.

-விளம்பரம்-

சரவணா சகோதரர்கள் :

மேலும், இவர்கள் நல்ல நிலைக்கு முன்னேறி வந்தவுடன் தனது சகோதரர்களான யோகரத்தினம், ராஜரத்தினத்தை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுடைய நிறுவனத்திலேயே சேர்த்துக் கொண்டு கடைகளை கவனித்து வந்தார்கள். சரவணா செல்வரத்தினம் இறந்த பிறகு சகோதரர்களுக்குள்ளேயே சண்டை வந்தது.அதனால் சொத்துக்கள் எல்லாம் பிரிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் தான் “லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ்” என்ற பெயரில் சரவணன் அருள் நடத்தி வருகிறார்.

தமிழிசையின் தாயார் :

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையும் நெருங்கிய உறவுகாரர்கள் என்ற தகவல் வந்தவுடன் தமிழகத்தையே பதற வைத்தது என்று சொல்லலாம். எப்படின்னு பார்த்தால் தமிழிசையின் தாயார், அருள் மனைவியின் தாயாருக்கு சின்னம்மாள் உறவு முறை. அப்ப தமிழிசைக்கு அருள் மனைவி அக்காள் மகள் உறவு என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நம்ம சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் அண்ணாச்சிக்கு தமிழிசை மாமியார் உறவுமுறை. இதை தெரிந்தவுடன் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement