சிம்பு மீதான #metoo புகார்…!சிம்பு தரப்பில் அளித்துள்ள விளக்கம்..!

0
388
Simbhu

கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் #metooo மூமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடுத்த பாலியல் புகாரை அடுத்து பல பிரபலங்கள் மீதும் அடுத்தடுத்து #metoo புகார் வெடித்து வருகிறது.

Lekha

இந்த #metoo புகாரில் நம்பமுடியாத பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் சமீத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவின் பெயரும் #metoo அடிபட்டுள்ளது என்ற பெரும் சர்ச்சை வெடித்தது.

நடிகர் சிம்பு மீது பிரபல எஸ் எஸ் மியூசிக் தொகுப்பாளினியும் நடிகையுமான லேகா வாஷிங்டன் சிம்புவின் பெயரை மறைமுகமாக #metoo வில் குறிப்பட்டார் என்று சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. சமீபத்தில் லேகா வாஷிங்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் #கெட்டவன் #metoo என்று பதிவிட்டிருந்தார்.நடிகை லேகா வாஷிங்க்டன், சிம்பு நடிப்பில் வெளியாக இருந்த “கெட்டவன்” படத்தில் நடித்திருந்தார் அதானல் அவர் கெட்டவன் என்று குறிப்பிட்டது சிம்பு தான் என்று பலரும் கூற தொடங்கி இருந்தனர்.

இதுகுறித்து நடிகை லேகா வாஷிங்க்டன் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்காதா நிலையில் சமீபத்தில் இந்த சர்ச்சை குறித்து சிம்பு தரப்பிடம் தொலைபேசி மூலமாக விசாரிக்கபட்டுள்ளது.அப்போது அவர்கள் தெரிவிக்கையில்’ கெட்டவன் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கே நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பணியாற்றினார். அவர்களில் யாராவது ஒருவரை லேகா கூறி இருக்கலாம். அது தயாரிப்பாளராகவோ, இயக்குனராகவோ இருக்கலாம். அதற்கு சிம்பு பலியாடாக இருக்க முடியாது நெட்டிசன்கள் சிம்பு மீது குறை கூறுவது தவறு’என்று தெரிவித்துள்ளனர்.