நயன்தாரா – விக்னேஷ் சிவன் யோக்கியமா.! வெளுத்து வாங்கும் விருது பெற்ற இயக்குனர்.!

0
1147
Radharavi
- Advertisement -

நயன்தாரா மற்றும் ராதாரவி – நயன்தாரா பிரச்சனை தான் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

-விளம்பரம்-
Image result for lenin bharathi

அவரது பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், ராதிகா, வரலட்சுமி, சின்மயி, மிலிந்த் ராவ் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் நடிகை நயன்தாரா முதன் முறையாக தனிப்பட்ட முறையில் அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல இயக்குனர் லெனின் பாரதி, ராதாரவிக்கு ஆதரவு தெரிவித்ததோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கடுமையாக சாடியுள்ளார். சமீபத்தில் வெளியாகி பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் என்பதும் குறிப்பிடத்க்கது.

ராதாரவி சர்ச்சை குறித்து பேசிய லெனின் பாரதி, ராதாரவி நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசினார் என்பது தானே பலரின் விவாதமாக உள்ளது. ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாராவை வைத்து பார்த்திபனை பார்த்து நான் ‘உங்களை போடணும் சா’ர் என்ற வசனத்தையும் விக்னேஷ் சிவன் தானே பேச வைத்தா.ர் அது இரட்டை அர்த்த வசனம் கிடையாதா. அந்த வசனத்தை வைத்து கைத்தட்டலை வாங்கிய நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் , ராதாரவி இரட்டை வசனத்தை பேசியது குறித்து கேட்க எந்த ஒரு அருகதையும் கிடையாது. ராதாரவி பேசியதைக் கேட்டு கைதட்டியவர்களை விமர்சிக்கும் அளவிற்கு அவர்கள் யோக்கியமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement