நான் ஓப்பனாவே சொல்றேன், திரிஷா விஷயத்துல உச்ச நட்சத்திரங்கள் யாரும் இதனால் தான் எதுவுமே பேசல – லெனின் பாரதி

0
299
- Advertisement -

கூவத்தூர் அதிமுக விவகாரம் தொடர்பாக ஏவி ராஜு அந்தர் பல்டி அடித்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக,அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அதிமுக நிர்வாகிகள் சுமார் 100 பேர் ஒரு வாரம் தங்கி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இச்சம்பவம் தமிழக அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த விடுதியில் பல நடிகைகளும் தங்கி உல்லாசம் செய்து இருந்ததாக தகவல் வந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஏவி ராஜு பேட்டியில் கூறியிருப்பது, எடப்பாடிக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனா, அவர் திரிஷா வேணும்னு கேட்டுட்டான். நடிகர் கருணாஸ் தான் இது எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

- Advertisement -

கூவத்தூர் சர்ச்சை:

அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். யார் யாருக்கு எந்த நடிகை வேண்டுமோ அதை ஏற்பாடு செய்து தந்திருந்தார். திரிஷாவுக்கு மட்டுமே 25 லட்சம் கொடுத்து இருந்தாங்க. நான் என்ன சொல்றது என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் கோலிவுட் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது குறித்து பிரபலங்கள் பலருமே ஏ வி ராஜூவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் திரிஷாவின் விவகாரத்தில் உச்ச நடிகர்கள் யாரும் குரல் கொடுக்காததற்கு காரணம் குறித்து இயக்குனர் லெனின் பாரதி பேசி இருக்கிறார். கயல் ஆனந்தி நடித்துள்ள ‘மங்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லெனின் பாரதி ‘ திரிஷா விஷயத்தில் நடிகர்கள் யாரும் எதையும் சொல்வதில்லைஎன்று பலர் சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

அதற்கு காரணம் அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வைத்து சினிமாவில் முன்னேறி வந்தவர்கள். உச்ச நட்சத்திரங்களாக இருக்கட்டும், அடுத்து நாட்டை ஆளத் துடிக்கும் நடிகர்களாக இருக்கட்டும், எல்லோரும் தங்களின் ஆரம்பக்கட்ட படங்களில் பெண் உடலை மையமாக வைத்து தான் சினிமாவில் பயணப்பட்டு வந்துள்ளனர் என்பதை நான் ஒப்பானாகவே சொல்வேன்.

நான் சிறுவனாக இருந்த போது, ரஜினி படமாக இருக்கட்டும், கமல் படமாக இருக்கட்டும், சில்க் ஸ்மிதா போஸ்டர் தான் பெரிதாக இருக்கும். சில்க் ஸ்மிதாவின் உடலை மையமாக வைத்து இவர்களின் உருவங்கள் சிறியதாக வைத்த போஸ்டர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணை உடலாக பாவிக்க வைக்கும் போக்கை ஏற்படுத்துகிற நாயகர்கள் பெண் விடுதலை குறித்து பேசமாட்டார்கள். அவர்கள் பேசினால் அதற்கு பின்னால் ஏதேனும் சுயநலம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement