ரிலீசுக்கு முன்னே துணிவு படத்தின் மொத்த வசூல் சாதனையும் முறியடித்த லியோ. விவரம் இதோ

0
1396
- Advertisement -

அஜித்தின் துணிவு படத்தின் வசூல் சாதனையை விஜய்யின் லியோ முறியடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் வசூல் சாதனையை விஜய்யின் லியோ முறியடித்திருக்கும் தகவல் தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தை வினோத் குமார் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

துணிவு செய்த சாதனை:

இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, அமீர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்ட கதை. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனையும் செய்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு வெளிவந்த அஜித்தின் படங்களை விட இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. குறிப்பாக, USA-வில் மட்டும் $ 850K வரை இந்த படம் வசூல் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

லியோ முறியடித்த சாதனை:

இந்த நிலையில் தற்போது இந்த வசூல் சாதனையை லியோ படம் முறியடித்து இருக்கிறது. லியோ படம் இதுவரை ரிலீசுக்கு முன்பு 28 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் USA-வில் மட்டும் இதுவரை $ 910K வசூல் செய்திருக்கிறது. துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் லியோ படம் முறியடித்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கண்டிப்பாக அனைவரும் எதிர்பார்த்ததை விட லியோ படம் வசூல் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது.

Advertisement