லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகிஇருந்தது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.
பெரும் தோல்வியடைந்த வாரிசு திரைப்படம் :
மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.
ஐயா, இது நம்ப தல பாட்டு copy மாறி இருக்கு…..
— AK_VidaaMuyarchi (@AK_VM001) June 20, 2023
எனக்கு மட்டும் தான் இப்படி தோனுதா? இல்ல உங்களுக்கும் அப்படி தான் தோனுதா nu comment பண்ணுங்க மக்களே…..#VidaMuyarchi #Thunivu #AjithKumar#NaaReady#NaaReadyPromo#NaaReadyCopy#Leo pic.twitter.com/kNjYaT2bhK
லியோ படம்:
இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.
முதல் பாடல் :
அதில் கையில் சுத்தியலுடன் இருக்கும் விஜய்க்கு பின்னால் ஒரு ஓநாயும் இடம்பெற்று இருக்கிறது. இந்த போஸ்ட்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘நான் ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் அஜித் நடித்த திருப்பதி படத்தின் பாடலின் காபி போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
Copy Cat#ThiruppathiVantha × #NaaReady
— DasaNDropZz | Vidaamuyarchi 😈 (@DasaN_DropZz) June 23, 2023
Ippo sollungada yaaru No.1 nu
This is #AjithKumar Territory#Vidaamyarchi #MyDearAJITHKUMAR pic.twitter.com/SOnPIVbb0u
பிரம்மாண்ட செட் , 500கும் மேற்பட்ட டான்சர்ஸ் :
இந்த பாடலின் படப்பிடிப்பிற்காக சென்னை ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பாடலில் கிட்டத்தட்ட 500 டான்ஸ்டர்கள் விஜயுடன் இணைந்து ஆடுகிறார்களாம். பிரபல நடன இயக்குநர் தினேஷ் இந்தப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்கிறார். இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு நடக்கும் என சொல்லப்படுகிறது. இவர் முன்னதாக ‘மாஸ்டர்’ படத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனவடிவமைப்பு செய்திருந்தார். அந்தப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.