லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் போலீசாருக்கு அனுப்பிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்றுதான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது. மேலும், விழா நடைபெறுவதர்க்காக மேடை எல்லாம் கூட போடப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலானது.
இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது. இதுகுறித்து வெளியிடபட்ட அறிவிப்பில் ‘பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் `லியோ’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பலர் நினைப்பது போல இதில் அரசியல் அழுத்தங்களோ மற்ற காரணங்களோ கிடையாது’ என்றும் கூறி இருந்தது.
லியோ இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பெரியமேடு காவல்துறைக்கு கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளது. அதில் ‘இந்த கடிதம் மூலம் உங்களுக்குத் தெரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால் வருகிற 30-ஆம் தேதி செப்டம்பர் அன்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருந்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா அதிகப்படியான பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பை மனதில் கொண்டும் ரத்தாகி இருக்கிறது.
Badass-u ma
— Seven Screen Studio (@7screenstudio) September 27, 2023
Namma Leo Das-u ma
Celebration ah start panirlama?#Badass lyrical video is releasing today at 6 PM 🔥#LeoSecondSingle #BadassFromToday6PM#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss… pic.twitter.com/lVQ7MXyona
உங்களின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். அசோகிரியங்களுக்கு மன்னிக்கவும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. இதன் மூலம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஏற்கனவே போலீசார் அனுமதி கொடுத்து இருக்கின்றனர் என்பது உறுதியாகி இருக்கிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில் இன்று லியோ படத்தின் இரண்டாம் பாடலான ‘badas’ என்ற பாடல் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.