ஷூட்டிங் சென்று கொண்டு இருக்கும்போதே சென்சாருக்கு சென்று வந்த லியோ.காரணம் இதுதான்

0
650
leo
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.

டைட்டில் டீஸர் :

இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்கலேட் தயாரிக்கும் விஜய் இரவு நேரத்தில் வாழ் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றனர். விஜய் வாழில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படம் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய்க்கு மாஸ் படமாக இருக்கக்கூடம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மேலும் லியோ படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் “லியோ” படத்தின் டீசர் சென்சார் போர்டுக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2 நிமிடத்திற்கும் மேலே இருந்த லியோ டைட்டில் டீசர் சோசியல் மீடியாக்களில் வைரலாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் லியோ படத்திற்கான அடுத்த ஆப்டேட் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

சென்சாருக்கு சென்று வந்த லியோ டீசர் :

இந்நிலையில் தான் தளபதி 67 படத்தின் டைட்டில் டீசர் சென்சார் போர்டுக்கு சென்று வந்துள்ளதாக ஒரு தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் தனுஷ் நடித்த “வாத்தி” திரைப்படம் வரும் 17 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாகும் என்றிருந்த நிலையில் அப்படத்தின் இடைவேளையில் லியோ படத்தின் டீசரை வெளியிட “வாத்தி” படத்தை விநியோகம் செய்யும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாகத்தான் லியோ படத்தின் டீசர் சென்சார் போர்டுக்கு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement