கோடை காலம் ஆரம்பித்த சில தினங்களிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும், சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னை வாசிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி வரும் அவள நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் உருக்கம் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் வெளியான டைட்டானிக் (Titanic), ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet), இன்செப்ஷன் (Inception), ஆஸ்கர் விருது பெற்ற ‘தீ ரெவனன்ட்’ (The Revenant) போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ. நடிகரை தாண்டி இவர், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
இதையும் பாருங்க : சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட போகும் ராஜமௌலி.! ரசிகர்கள் குஷி.!
சமீபத்தில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ், சென்னை குடிநீர் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் செயற்கைக்கோள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தி ஹாலிவுட் பிரபலங்களின் கவனத்தயும் ஈர்த்துள்ளது.
அதில், மழை மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும் அனைத்து ஏரி, குளங்களில் காலியாகிவிட்டது .நகரம் முழுக்க சுத்தமாக தண்ணீரே இல்லை. குறிப்பாக இந்தியாவின் தென் பகுதியில் உள்ள சென்னையில் மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இங்கே உள்ள நான்கு நீர்நிலைகளிலும் தண்ணீர் சுத்தமாக வறண்டு விட்டது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அங்கே உள்ள உணவகங்கள், குடியிருப்புப் பகுதிகள் என்று அனைத்துமே தற்காலிகமாக முடங்கியுள்ளது.
நகரின் முக்கிய பகுதியான மெட்ரோவில் கூட உயிர் ஓட்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர் அதிகாரிகள் அனைவரும் தண்ணீர் பிரச்சினைக்கு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர் ஆனால் ஹலோ தண்ணீருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்று மிகவும் உருக்கமான பதிவை செய்துள்ளார். தமிழகத்தில் தலைவிரித்து ஆடும் தண்ணீர் பிரச்சனை தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.