தோனியின் தயாரித்த முதல் படமான ‘ LGM ‘ எப்படி – விமர்சனம் இதோ.

0
1480
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் எல்ஜிஎம். lets get married என்பது இந்த படத்தின் விரிவாக்கம். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவானா, நதியா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் தான் இவர் தயாரிப்பாளராக சினிமாவில் அவதாரம் எடுத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் எல்ஜிஎம் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானாவும் காதலிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அக்ரிமெண்ட் போட்டு பழகுகிறார்கள். ஹரிஷ் கல்யாணத்துக்கு சீக்கிரமாகவே திருமணம் நடக்க வேண்டும் என்று கோயில், பூஜை என்று அவருடைய அம்மா நதியா சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்போதுதான் ஹரிஷ் கல்யாண், இவானா காதலிக்கும் விவரம் இருவீட்டாருக்குமே தெரிய வருகிறது. திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.

- Advertisement -

படத்தின் கதை:

ஆனால், இவானா போடும் திடீர் கண்டிசனால் திருமணம் வேண்டாம் என்று ஹரிஷ் கல்யாண் முடிவு எடுக்கிறார். பின் ஏதேதோ பேசி இவானா திருமணத்திற்கு ஓகே சொல்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் இரு குடும்பத்தாரும் சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். இந்த சுற்றுலா எதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற விவரம் நதியாக்கு தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது? இறுதியில் ஹரிஷ் கல்யாண் இவானாவிற்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

மேலும், இந்த படம் கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பு என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ட்ரெய்லர் வெளியான போதே எல்ஜிஎம் படத்தின் கதை என்ன என்பது பலருக்குமே தெரிந்து விட்டது. அதனால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நட்பாக பழகியவர்கள் காதலித்து பின் பிரச்சனைகளுக்கு பிறகு திருமணம் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

வழக்கமான அரைத்த மாவை தான் இயக்குனர் இந்த படத்திலும் அரைத்திருக்கிறார். படத்தில் இவானா போடும் கண்டிஷன் எல்லாம் ரொம்ப ஓவராகவே இருக்கிறது என்றே சொல்லலாம். கணவர் இல்லாமல் சிங்கிள் மதராக ஹீரோவை நதியா வளக்கிறார். வழக்கம்போல் நதியா இந்த படத்தில் தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். ஹரிஷ் கல்யாண் தன்னுடைய அம்மாவை புரிந்துகொள்ளும் விதம், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஒரு மாமியார் மருமகள் இருவரும் எதிர்பார்க்கும் விஷயங்களை குறித்து இயக்குனர் காமெடி கலந்த பாணியில் சொல்லி இருக்கிறார். இவர்களை அடுத்து யோகி பாபு, ஆர் ஜே விஜய் ஆகியோரின் காமெடிகள் எல்லாம் எடுபட வில்லை. ஆனால், படத்தில் பெரிதாக வசனங்கள் தான் செட்டாகவில்லை. பின்னணி இசையும் படத்திற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒரு சாதாரண காதல் கதையை தான் சுத்தி சுத்தி இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

சொல்லப்போனால், யோகி பாபு படத்திற்கு தேவையே இல்லை. காமெடிக்கு வேண்டுமென்றே வைத்திருப்பது போல் சில கதாபாத்திரங்கள் படத்தில் வைத்திருக்கிறார்கள். ஒரு ஷார்ட் பிலிம் படத்தை இரண்டரை மணி நேரம் சென்று தியேட்டரில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக தான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு கதையா? இதெல்லாம் ஒரு வசனமா? என்று திட்டும் அளவிற்கு இயக்குனர் கொடுத்து இருக்கிறார் என்று சொல்லலாம். தோனியின் படம் என்பதால் ரசிகர்கள் ரொம்ப அதிகமாகவே எதிர்பார்த்தார்கள். கடைசியில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

நிறை:

தோனி தயாரித்த முதல் படம்

காதல் கதை

சில காட்சிகள் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது

மாமியார் மருமகள் சென்டிமென்ட்

குறை:

நடிகர்கள் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்

இயக்குனர் கதைக்களத்தை இன்னும் சுவாரசியமாக கொடுத்திருக்கலாம்

நகைச்சுவை ஒர்க்கவுட்டாகவில்லை

பின்னணிசை படத்திற்கு செட்டே ஆகவில்லை.

ஷார்ட் பிலிம் மாதிரி படம் இருக்கிறது

இறுதி அலசல்:

மொத்தத்தில் எல்ஜிஎம் படம்- மிகப்பெரிய ஏமாற்றம்

Advertisement