அந்த படத்துல நடிக்க முடியலனு நயன்தாரா இன்னும் ஃபீல் பண்றாங்க- லிங்குசாமி பேட்டி.

0
16649
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பையா படத்தில் நடிப்பதாக இருந்தது. தற்போது இது குறித்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளி வந்த படம் தான் பையா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-
Lingusamy to work with Karthi, Vishal next year | Bollywood News ...

- Advertisement -

இந்த படத்தை லிங்குசாமியின் சகோதரர் தான் போஸ் மற்றும் லிங்குசாமி ஆகிய இருவரும் இணைந்து தான் இந்த படத்தை தயாரித்தார்கள். பையா படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காதல் கதை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்திருந்தார். படத்தின் ஒவ்வொரு பாடல்களும் வேற லெவல்ல ரசிகர்களை கவர்ந்தது. வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர் கார்த்திக். இவர் தன் நண்பர்களுடன் பெங்களூரில் தங்கி இருக்கிறார். அப்போது தான் தமன்னாவை சந்திக்கிறார்.

இதையும் பாருங்க : விஜய் சேதுபதிக்காக எழுதியுள்ள கதை என்னுடைய இந்த படம் மாதிரி தான் இருக்கும் – சேரன் அப்சட் பதிவு.

பின் தமன்னாவை மும்பையில் கொண்டு சென்று விடுவதற்காக அவருடன் காரில் செல்கிறார். இவர்கள் பயணிக்கும் வழியில் எல்லாம் இவர்களுடைய எதிரி கும்பல்கள் இவர்களை தாக்குகிறார்கள். இதை மீறி கார்த்திக் தமன்னாவை காப்பாற்றுகிறார். இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பையா படத்தில் ஹீரோயினாக நயன்தாரா தான் நடிக்க இருந்தார் என்று சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

-விளம்பரம்-
Paiyaa on Moviebuff.com

அதில் அவர் கூறியது, இந்த படம் முழுக்க முழுக்க டிராவலிங் படமாக எடுத்தோம். இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கார்த்திக் அவர்களை தேர்ந்தெடுத்தோம். நடிகர் கார்த்திக் அவர்கள் ஒரு சின்சியரான மனிதர். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேசப்பட்டது. ஆனால், இந்த படம் எடுக்கும் போது நயன்தாராவுக்கு சில படங்களில் சேலரி கம்மியாக கொடுத்து வந்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : கொரோனா பாதிப்பு, மோடிக்கு கடிதம் எழுதிய மாணவன். சூப்பர் ஐடியா என்று பாராட்டிய பாக்கியராஜ்.

அதனால் நாங்கள் இந்த படத்தில் நடிக்க நயன்தாராவிடம் சேலரி கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டோம். அதற்கு பிறகு தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஒரு சின்ன தகறாரு. அதனால் அவர் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டார். அதற்கு பிறகு தான் தமன்னா அவர்களை இந்தப் படத்தில் நடிக்க முடிவு எடுத்தோம். இந்த படத்தில் நடிக்க முடியாத வருத்தம் தற்போது வரை எங்கள் ரெண்டு பேருக்கும் இருக்கு. அவங்களுக்கு ஏத்த சரியான கதை அமையுறப்போ நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்ப்போம் என்று கூறினார்.

Kaashmora Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News ...

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் லிங்குசாமியும் ஒருவர். இவர் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு 2001ஆம் இயக்குனராக ஆனந்தம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானர். இவர் சொந்தமாக திருப்பதி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் ரன்,சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, கும்கி, இவன் வேற மாதிரி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

Advertisement