விஷாலின் திருமணம் குறித்து இயக்குனர் லிங்குசாமி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன் பிறகு இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளிவந்த படம் ‘தி வாரியர்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஆதி, பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
லிங்குசாமி பேட்டி:
தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.
இதை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஷாலின் திருமணம் குறித்து லிங்குசாமி சொன்னது, விஷாலுக்கு கீர்த்தியை பெண் கேட்க சொல்லி விஷால் உடைய அப்பா சொன்னார்.

கீர்த்தி சுரேஷ் பற்றி சொன்னது:
பின் நான் கீர்த்தியிடம் போய் நின்னேன். அவர், என்ன சார் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே நான், விஷால் பத்தி சொன்னேன். அப்போது கீர்த்தி சுரேஷ், நான் ஸ்கூலில் இருந்து லவ் பண்ணுகிறேன் என்று சொன்னார். அவரை தான் இப்போ கீர்த்தி சுரேஷ் கல்யாணமும் செய்து இருக்கிறார். கீர்த்தியுடன் வெற்றிக்கு பெரிய பக்க பலமாக அந்த நபர் இருந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் கல்யாணத்திற்கு மூன்று நாள் நான் போயிருந்தேன். ரொம்ப முக்கியமானவர்களை மட்டும் தான் கல்யாணத்திற்கு கூப்பிட்டு இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:
கடைசியாக இவர் ஹிந்தியில் ‘பேபி ஜான்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் இயக்குனர் அட்லீ இயக்கிய தெறி படத்தின் ரீமேக் தான். தற்போது படங்களில் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் அவரின் நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள்.






