தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது. மேலும், நடிகர் சிம்பு அவர்கள் விரைவில் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.ஆனால் , நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.

16 நிமிடத்தில் பார்க்கவும்

அதைத் தொடர்ந்து, தற்போது அவர் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்தார். மேலும், முன்னால் சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் சிம்புவின் வருகைக்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்தார்.

இதையும் பாருங்க : அடையாளம் தெரியாத அளவு புதிய கெட்டப்பில் மாறியுள்ள ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்.

Advertisement

பின்னர் பல்வேறு இழுபறிக்கு பின்னர் மாநாடு திரைப்படம் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் சிம்பு சபரி மலைக்கு சென்று வந்தார். அவர், சபரி மலைக்கு சென்று திரும்பியவுடன் மாநாடு படம் துவங்கும் என்றும் அறிவிக்கபட்டது. ஆனால், மீண்டும் மாநாடு படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் சிம்பு 1 கோடி அட்வான்ஸ் வாங்கி கொண்டு இன்று வரை திருப்பி கொடுக்கவில்லை என்று பிரபல இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள லிங்குசாமி பேசுகையில். ரன் படத்திற்கு பின்னர் மீண்டும் மாதவனுடன் வேட்டை படத்தில் இணைந்தேன். அந்த படத்தில் சிம்பு மற்றும் மாதவன் தான் பண்ண வேண்டியதாக இருந்தது. அதற்கு முன்பணமாக 1 கோடி கொடுத்தோம் இன்று வரை திருப்பி வாங்கவில்லை. மேலும், சிம்பு அப்போது மிகவும் பிஸியாக இருந்தார். அதே போல நான் எதிர்பார்த்தபடி நேரத்தில் அவரை சந்தித்து என்னால் கதை சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார் லிங்குசாமி.

Advertisement
Advertisement