-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பிரண்ட்ஸ் பட நடிகை விஜயலக்ஷ்மி மீது லாட்ஜ் ஓனர் புகார் – இதான் காரணம்.

0
1070
vijayalakshmi

தமிழில் பிரபல நடிகையான விஜய் லட்சுமி மீது லாட்ஜ் ஓவர் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை விஜயலட்சுமி ‘பிரன்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். பிரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் பூந்தோட்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி என்ற படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

கடைசியாக 2010ல் வந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’படத்தில் ஆர்யாவிற்கு அண்ணியாக நடித்தருப்பர் விஜயலட்சுமி.கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் கூட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார் விஜயலக்ஷ்மி. கடந்த ஆண்டு கூட உயர் ரத்த அழுத்தம் காரணமாக தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிசைக்கு கூட பணம் இல்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இருந்த பணத்தை அம்மாவின் மருத்துவ செலவிற்காக செலவாகிவிட்டர்த்து அதனால் சினிமா துறையினர் உதவவேண்டும் என அவர் சகோதரிகேட்டிருந்தார். இதனால் பல்வேறு நடிகர்கள் விஜயலட்சுமியை சந்தித்து உதவி செய்து வந்தனர்.சமீபத்தில் கூட நடிகை விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு முயன்று இருந்தார். 4 மாதங்களாக தான் தெரிவிக்கும் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இருப்பினும் வருமானத்திற்கு வழி இல்லாமல் மிகவும் சிரமத்தில் இருந்து வந்தார் விஜயலக்ஷ்மி. இப்படி ஒரு நிலையில் நடிகை விஜயலக்ஷ்மி மீது லாட்ஜ் உரிமையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகை விஜயலஷ்மி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடிகை விஜயலெட்சுமி வாடகைக்கு அறை எடுத்து தங்கிவருகிறார். 8 மாதமாக நடிகை விஜயலெட்சுமி தான் தங்கியிருந்த அறைக்கு 3 லட்சம் வரை வாடகை தரவில்லை என தங்கும் விடுதி உரிமையாளர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news