கார்த்தி கையில் இருக்கும் கட்டப்பையில் இருப்பது தான் கைதி 2 கதையே – லோகேஷ் சொன்ன பதில் (அந்த பைக்குள் என்ன இருந்துள்ளது பாருங்க)

0
387
kaithi
- Advertisement -

கைதி 2 படத்தின் கதை குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்து இருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு மாசான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்று கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு மிகப்பெரிய வரவேற்பும், புகழும் கிடைத்திருக்கிறது.

கமல் எழுதிய கடிதம்:

இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். இதனால் லோகேஷை பாராட்டி கமல் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் life-time செட்டில்மெண்ட் என்றும் கூறியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார், லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார் கமல்.

-விளம்பரம்-

லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பல பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இடம் கைதி 2 படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது, கைதி படத்தில் கார்த்தி கையில் ஒரு கட்டப்பை இருக்கும். அதில் இருப்பதெல்லாம் அவர் கபடி விளையாடி ஜெயித்த கோப்பைகள். அவர் ஒரு கபடி பிளேயர். ஜெயிலில் இருக்கும் போது அவர் நிறைய போட்டிகளில் வெற்றி பெற்று வாங்கி இருப்பார்.

கைதி 2 படத்தின் கதை:

அதைத்தான் அவர் அந்தப் பையில் கட்ட பையில் வைத்திருப்பார். இதை வைத்து தான் அவருடைய கைதி 2 கதை தொடரும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் மூழ்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிலர், கண்டிப்பாக கைதி 2 சரவெடி தான் என்றும் கூறி வருகின்றனர். அடுத்து லோகேஷ் அவர்கள் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement