கூலி படம் உருவான விதம் பற்றி வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள்.

இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
கூலி படம்:
மேலும், இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் ரஜினி பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அதன் பின் கூலி படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், டைம் ட்ராவல் மையப்படுத்திய கதை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

படம் குறித்த தகவல்:
தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் எல்லாம் முடிவடைந்து அனிருத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து, எண்கள் பயணத்தை ஒன்றாக தொடங்கி நான்காவது முறையாக மீண்டும் இணைந்து இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் இருவரும் சேர்ந்து பணியாற்றும்போது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கிறது. இந்த முறையும் எங்கள் இருவருடைய கூட்டணியும் தெறிக்கவிடும்.

லோகேஷ் பதிவு:
என்னுடைய இன்னொரு தாயின் மகன், என் சகோதரன் அனிருத்திற்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த கூலி படம் உருவாகுவதற்கு முக்கிய காரணமே அனிருத் தான். அது தொடர்பாக படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவில் அனிருத் பேசியிருக்கிறார் என்றார். இந்த நிலையில் கூலி படம் உருவாக ரஜினியின் ஒரு பெயிண்டிங் தான் காரணம் என்று கூறப்படுகிறது. லோகேஷின் ஃபுட்டேஜ்களை இசை வேலைகளின் போது அனிருத் தொடர்ந்து பார்த்து வந்து இருக்கிறார். அப்போது அனிருத், லோகேஷ் தலைவருக்கு படம் செய்தால் அதிரடியாக இருக்கும் என்று எண்ணம் வந்திருக்கிறது.
படம் உருவான விதம்:
அப்படி ஒரு நாள் அனிருத் வீட்டில் இருக்கும் போது ரஜினி பெயிண்டிங் படத்திற்கு முன் லோகேஷ் கனகராஜ்- அனிருத் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் கூலி படத்திற்கான ஆரம்ப புள்ளி. ரஜினிக்கு படம் செய்வது பற்றி அனிருத், லோகேஷிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு லோகேஷ் ஒரு ஐடியாவை சொல்லி இருக்கிறார். இந்த ஐடியா அனிருத்துக்கு பிடித்து விட்டது. உடனடியாக ரஜினிக்கு மெசேஜ் செய்து லோகேஷ் உங்களுக்காக ஒரு கதை வைத்திருக்கிறார் என்று சொன்னார். ரஜினி உடனடியாக லோகேஷை அழைத்து கதை கேட்டிருக்கிறார். லோகேஷ் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து விட கூலி படத்தினுடைய வேலைகள் சீக்கிரமாக தொடங்கப்பட்டது. தற்போது அந்த படம் திரைக்கு வர இருக்கிறது.






