படத்தில் De Aging இருந்தது உண்மை தான், ஆனா கடைசி நேரத்தில் இதனால் நீக்கிவிட்டோம். லோகேஷ் சொன்ன காரணம்.

0
500
vikram
- Advertisement -

விக்ரம் படத்தில் டி ஏஜிங் காட்சி வராதது குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஜூன் 3 ஆம் தேதி வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை, மூன்றாம் காதலரை பிரிந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் தற்போது பாலியில் புகாரில் சிக்கிய நபரை காதலிக்கும் எமி. யார் தெரியுமா ?

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

மேலும், லோகேஷை பாராட்டி கமல் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் life-time செட்டில்மெண்ட் என்றும் கூறியிருந்தார். அதோடு சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு மாசான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல்.

கமல் கொடுத்த பரிசு:

அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்து இருந்தார். மேலும், பான் இந்திய படமாக விக்ரம் படம் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, படத்தில் பழைய விக்ரம் படத்துடைய காட்சிகளை டி ஏஜிங் செய்து வைக்கப்படுவதாக கூறி இருந்தார்கள். ஆனால், படம் வெளியானதற்கு பிறகு அந்த மாதிரி எந்த காட்சியிலும் வரவில்லை.

-விளம்பரம்-

டி ஏஜிங் காட்சி வராதது குறித்து லோகேஷ் அளித்த பேட்டி:

இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பழைய விக்ரம் படத்துடைய காட்சியை டி ஏஜிங் செய்து வைப்பதாக இருந்தது உண்மை தான். அதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தோம். இது தொடர்பாக USA,UK இடம் பேசியிருந்தோம். ஒரு நிமிடம் காட்சியாக வைப்பதற்குப் ஏற்பாடுகள் எல்லாம் நடந்தது. ஆனால், நாங்கள் நினைத்தபடி சரியான நேரத்தில் அமையவில்லை. இதுகுறித்து நான் கமல் சாரிடம் பேசியபோது,

Vikram

டி ஏஜிங் குறித்து லோகேஷ் சொன்னது:

அவரும் உங்களுக்கு வேண்டும் என்று தோன்றியதால் வையுங்கள் இல்லை என்றால் வெட்டி விடுங்கள் என்று சொல்லி விட்டார். அதனால் நாங்கள் நினைத்த நேரத்தில் அந்த டி ஏஜிங் காட்சி தயாராகவில்லை. ஆனால், தற்போதும் அதற்கான வேலைகள் சென்று கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்தது போல அந்த காட்சி வந்தவுடன் கண்டிப்பாக அதை தனியாக எக்ஸ்க்ளூசிவ் வீடியோவாக வெளியிட இருக்கிறோம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. கண்டிப்பாக பழைய விக்ரம் படத்துடைய காட்சியுடன் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

Advertisement