திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை, மூன்றாம் காதலரை பிரிந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் தற்போது பாலியில் புகாரில் சிக்கிய நபரை காதலிக்கும் எமி. யார் தெரியுமா ?

0
652
amy
- Advertisement -

நடிகை எமிஜாக்சன் தன்னுடைய புது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். இவர் ஹாலிவுட் மாடலும் ஆவார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் எமி ஜாக்சன் நடிகை ஆனார். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
எமி – ஜார்ஜ்

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 என்ற பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. எமி ஜாக்சன் அவர்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து இருந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : விஜய் சேதுபதி, சூர்யாவை தொடர்ந்து தளபதி 67ல் வேற லெவல் நடிகரை களமிறக்கும் லோக்கி (வில்லனா ? )

- Advertisement -

எமிக்கு பிறந்த குழந்தை:

திருமணத்திற்கு முன் எமி தாயான விஷயம் சினிமா வட்டாரங்களில் பேசு பொருளாகி இருந்தது. பிறகு எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்தத் தம்பதி ஆண்ட்ரியாஸ் எனப் பெயரிட்டு இருந்தார்கள். பொதுவாக குழந்தையை பெற்றெடுத்தாள் நடிகைகள் தங்களது உடல் அமைப்பை கண்டுகொள்வது இல்லை. ஆனால், எமி ஜாக்சன் குழந்தை பிறந்த பின்னரும் தனது உடலை பிட்டாக வைத்துக்கொண்டு இருக்கிறார். தற்போது கோலிவுட், டோலிவுட்டை தாண்டி, அம்மணி ஹாலிவுட்டிலும் ‘காசிப் கேர்ள்’ , வெப் சீரிஸில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். மேலும், குழந்தை பிறந்த பிறகும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

எமியின் காதல் விவகாரம்:

திடீரென்று எமி கடந்த ஆண்டுக்கு முன் தன்னுடைய காதலனுடன் மனகசப்பு ஏற்பட்டு விட்டது அதனால் பிரிகிறேன் என்று அறிவித்திருந்தார். இதனால் சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் எழுதி இருந்தது. இந்த நிலையில் எமிஜாக்சன் நாலாவது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அதாவது ஆறு வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை, எமி ஜாக்சன் காதலித்திருந்தார். பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்கை எமிஜாக்சன் காதலித்திருந்தார். இவர்களுடைய காதலும் பிரிந்தது.

-விளம்பரம்-

நடிகர் எட் வெஸ்ட்விக் குறித்த சர்ச்சை:

அதனை தொடர்ந்து லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை எமிஜாக்சன் காதல் திருமணம் செய்யாமல் கர்ப்பமாகி ஆண் குழந்தையும் பெற்றிருந்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது நாலாவதாக இவர் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. இவருடன் தான் எமி டேட்டிங் செய்திருக்கிறார். ஏற்கனவே நடிகர் எட் வெஸ்ட்விக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டமார் என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார்.பின் அவர் அந்த பெண்ணை பிரேக் அப் செய்தார். அது மட்டுமின்றி இவர் பாலியல் புகாரிலும் சிக்கினார்.

எமி காதலிக்கும் புது காதலன்:

பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பெண்கள் எட் வெஸ்ட்விக் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் எமி டேட்டிங் செய்வது குறித்து பலரும் விமர்சித்து கருத்து போட்டு இருந்தார்கள். இருந்தாலும், இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் முதல் முறையாக எமி ஜாக்சன் தனது சோசியல் மீடியாவில் எட் வெஸ்ட்விக் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதன்மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியாகி இருக்கிறது.

Advertisement