இந்த படத்துக்கு தான் காத்துனு இருந்தேன்,இனி தளபதி 67 பத்தி – லோகேஷ் கனகராஜ் கொடுத்த வெறித்தனமாக அறிவிப்பு.

0
332
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் வாரிசு படத்தை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ். அப்போது அவரிடம் வாரிசு படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர் “படம் பார்க்க மிகவும் ரெஃப்ரெஷிங்காக இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காகதான் வெயிட்டிங்கில் இருந்தேன். விரைவில் தளபதி 67 படத்திற்கான தேதி குறித்த அறிவிப்பை நான் சொல்வேன்” என்று கூறி இருக்கிறார்.

மேலும் தளபதி 67 விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆறு வில்லன்களில் சஞ்சய் தத் மற்றும் பிரித்திவிராஜ் என இரண்டு வில்லன்கள் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நான்கு வில்லன்கள் தேர்வுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement