ரசிகர்களின் எதிர்பார்ப்பு பற்றி லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்திற்கு பிக்சர்ஸ் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கூலி படம்:
அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் வாரி குவித்து வருகிறது. இதுவரை இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் பார்த்து இருந்தார். அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சுவாரஸ்யமான கேள்விகளுக்கெல்லாம் லோகேஷ் பதில் அளித்து இருந்தார்.

லோகேஷ் பேட்டி:
அதில் அவர், இதுவரை நான் எதுவுமே சொன்னது கிடையாது. ஆனால் ரசிகர்களுடைய அபரிமிதமான எதிர்பார்ப்பு இருக்கிறது பார்த்தீர்களா, அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்திக் கொண்டு வந்திருக்கிறது. என்னை மட்டும் இல்லை அனைத்து நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் அதுதான் உயர்த்திருக்கிறது. இந்த அபரிமிதமான எதிர்பார்ப்பு இல்லையென்றால் எங்களால் சினிமாவே பண்ண முடியாது. ரசிகர்களின் இந்த அபரிமிதமான எதிர்பார்ப்பை குறை சொல்ல முடியாது. உதாரணத்துக்கு நாங்கள் கூலி படத்தில் டைம் டிராவல், எல்சியுவில் படம் இருக்கிறது என்று எதுவுமே சொல்லவில்லை. அப்படி இருந்தும் இவை அனைத்தும் ரசிகர்களாகவே பேசி பேசிக்கொண்டார்கள்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
நான் ஒரு ட்ரெய்லர் கூட வெளியிடவில்லை. 18 மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. மொத்த படிப்பிடிப்பு முடியும் வரை படத்தின் மீது எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை கூட்ட முடியுமோ அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை கூட்டி வைத்திருந்தேன். அதனால் தான் ரசிகர்களுக்கு ரஜினி சார் படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் படம் என்றால் ஒரு ஹைப். அதை எப்படி தடுக்க முடியும். என்னால் ஒருபோதும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு கதை எழுத முடியாது. அதற்கு நான் ஒருபோதும் முயற்சி செய்ய மாட்டேன். நான் எழுதும் கதை அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தால் சந்தோஷம் என்று கூறி இருக்கிறார்.






