‘அவன் வீட்ல அவன் ஹீரோ’ – ஜாபரை(கட்டிங் பிளேயர்) உருவ கேலி செய்த Plip Plip வீடியோவிற்கு லோகேஷ் கொடுத்த பதிலடி.

0
252
lokesh
- Advertisement -

நாளுக்கு நாள் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது போல தமிழ் சினிமாக்களை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திரைப்படம் வெளியானால் அந்த படத்தின் விமர்சனம் வார இறுதியில் தான் தொலைக்காட்சியில் வரும் ஆனால், தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு படம் வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே அந்த படத்தின் விமர்சனம் மட்டுமல்லாமல் அந்த பாடமே இணையத்தில் வெளியாகிவிடுகிறது.

-விளம்பரம்-

தற்போது இருக்கும் காலகட்டத்தில் யூடுயூப் விமர்சகர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் தமிழ் யூடுயூப் சேனல்களில் 18 + என்று குறிக்கொண்டு ஆபாசமாக பேசி வீடியோகளை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பிலிப் பிலிப் யூடுயூப் சேனல். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர்கள் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை ரோஸ்ட் செய்த் வீடியோ பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

இதையும் பாருங்க : Surrogacy மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா – Dmல் குவிந்த விமர்சனங்களுக்கு சின்மயி கொடுத்த விளக்கம்.

- Advertisement -

பெரும் மகிழ்ச்சியில் கமல் :

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகார்ஜுக்கு 80 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை பரிசளித்தார் கமல். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுன் 13 உதவி இயக்குனர்களுக்கு பைக்கும், சூர்யாவிற்கு 40 லட்சம் பாதிப்புள்ள ஒரு rolex கைக்கடிகாராத்தையும் பரிசாக கொடுத்துள்ளார் கமல்.

Plip Plip விக்ரம் ரோஸ்ட் :

இதுவரை வந்த கமல் படங்களிலிலேயே அதி விரைவாக 300 கோடி வசூலை பெற்ற கமல் படமாக இந்த படம் அமைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதே போல பல விமர்சகர்களும் இந்த படத்திற்க்கு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். அவ்வளவு ஏன் நல்ல படத்தை கூட கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை கூட இந்த படத்தை பெரிதாக கலாய்க்கவில்லை.

வீடியோவில் 2 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

கேலி செய்யும் நெட்டிசன்கள் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பிலிப் பிலிப் சேனல் ரோஸ்ட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தை கேலி செய்த்தோடு மட்டுமல்லாமல் கமலின் நடிப்பையும் கேலி செய்து இருக்கின்றனர். பொதுவாக இவர்கள் ரோஸ்ட்டில் இருக்கும் காமெடிகள் ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கும் தான். ஆனால், இந்த படத்தின் ரோஸ்ட் வீடியோவை கண்டு நெட்டிசன்களே இவர்களை ரோஸ்ட் செய்து வந்தனர்.

Plip Plipற்கு லோகேஷ் கொடுத்த பதிலடி :

இப்படி ஒரு நிலையில் Plip Plip விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் ‘எந்த படமும் எல்லாருக்கும் பிடிக்குனும்னு அவசியம் இல்ல. ஆனால், அந்த வீடியோவை என் Adஸ் காமித்து இருந்தார்கள். நானும் அடுத்த படத்தின் Roast பார்த்து இருக்கிறேன். என் படத்தில் நடித்த ஜாபர் எல்லாம் அவன் வீட்டில் அவன் ஹீரோ. அவன் என்னை நம்பி தான் என் படத்தில நடிக்க வந்தான். ஜாபரின் நடிப்பை கேலி செய்யலாம் ஆனால், அவரின் உடலை கேவலமாக பேசுவது எனக்கும் துளியும் விருப்பம் இல்லை. நாம் எதை விதைக்கிறோமே அதை தான் அறுப்போம் என்று நம்புவன் நான்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்

Advertisement