விக்ரம் படத்தில் Vintage கமலை கொண்டு வர இத்தனை கோடி செலவா ? அதுவும் எந்த கெட்டப் பாருங்க.

0
370
vikram
- Advertisement -

விக்ரம் படத்தில் 80களில் கமல் எப்படி இருந்தாரோ அப்படியே கொண்டு வரும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
After Master Lokesh Kanagaraj Join Hands With Kamal

மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. மேலும், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் பட்டத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

விக்ரம் படத்தின் கதை:

அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது விக்ரம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. மேலும், கதைப்படி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் இந்த முயற்சியை முறியடிக்க பார்க்கிறார்.

vikram

விக்ரம் படம் பற்றிய தகவல்:

இதனால் கமலும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவரஇருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1986ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் விக்ரம். தற்போது 2022ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் அதே டைட்டிலில் கமல் நடித்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் கமலஹாசன் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது இளமைக்கால கமலாக படத்தில் காண்பிக்கிறார்கள்.

-விளம்பரம்-

விக்ரம் படத்தில் De Ageing :

ஆகவே, இந்த படத்தில் டி ஏஜிங் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 80களில் கமல் எப்படி இருந்தாரோ அதே கதை மீண்டும் பிளாஷ் பேக் போர்சன் ஆக லோகேஷ் கனகராஜ் கிரேட் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், இதனை உறுதி செய்யும் விதமாக தொழில்நுட்ப குழுவினருடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் அருகே வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் இளமையான கமல் புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவில் De Ageing தொழில்நுட்பத்தின் மூலமாக இளமையான கமல்ஹாசனை மீண்டும் திரையில் காட்டி மேஜிக் செய்யப்போகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

De Ageing செய்த படங்கள்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமிதாப் பச்சனும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு இதே மாதிரி ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் ஒரு கூடை சன்லைட் பாடலுக்கு ரஜினிகாந்த், ஆதவன் படத்தில் சிறுவன் சூர்யாவின் முகத் தோற்றத்தையும் De Ageing செய்து இருந்தார்கள். தற்போது விக்ரம் படத்தில் De Ageing மேஜிக் செய்திருக்கிறார்கள். இப்படி விக்ரம் படம் குறித்த அப்டேட் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement