அசைவம் சாப்பிடுபவர்கள் குறித்து லொள்ளு சபா ஜீவா பேசிய இருக்கும் கருத்து சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகளாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர் சந்தானம் தொடங்கி யோகி பாபு வரை லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமே சினிமாவில் நுழைந்தனர்.

இவர்களில் காமெடி நடிகரான ஜீவாவும் ஒருவர். இவர் லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அதில் குறிப்பாக, விஜய் நடித்த குருவி, ஆர்யா நடிப்பில் வெளியாகியிருந்த மதராஸ் பட்டினம், சுந்தர் சி நடிப்பில் வெளியாகியிருந்த முரட்டுக்காளை உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். பின் சினிமா வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்ற உடன் இவர் கலர்ஸ் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மீனாட்சி என்ற தொடரில் நடித்திருந்தார்.

Advertisement

5 மாதங்களே ஓடிய இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாத காரணத்தால் 116 எபிசோடுகள் மட்டுமே ஓடியது. இதனை தொடர்ந்து ஜீவா வேறு எந்த தொடரிலோ படத்திலோ நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இவர் அசைவம் சாப்பிடுவது குறித்து பேசிய கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

நீயா நானா நிகழ்ச்சிக்கு பொடியாக ஆரம்பிக்கப்பட்ட தமிழா தமிழா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இயக்குனர் கரு பழனியப்பன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர் சேனலுடன் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து தற்போது ஆவுடை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அசைவம் சாப்பிடுபவர்கள் Vs சாப்பிட விரும்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் லொள்ளு சபா ஜீவா பேசி இருக்கும் கருத்து சமூக வலைதளத்தில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘ நீங்கள் நான் வெஜ் சாப்பிடும் போது என்ன பிரச்சினை ஏற்படும் ஒரு புரோட்டா சாப்பிடும் இடத்தில் நான்கு புரோட்டா சாப்பிடுவோம் ஒரு பிரியாணி சாப்பிடும் இடத்தில் இரண்டு பிரியாணி சாப்பிடுவோம். அதனால் கண்ட என்னை உள்ளே போகும் இதனால் கெட்ட கொழுப்புகள் நமக்கு சேரும்.

Advertisement

ஆனால் நீங்கள் வெஜ் ஆக இருந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் தானாக குறைந்து விடும்.நான் வெஜ் நீங்கள் எவ்வளவிற்கு எவ்வளவு சாப்புடுகிறீர்களோ அந்த உயிரினங்களின் குணாதிசயங்கள் உங்களுக்கு வந்துவிடும். நீங்கள் ஆடோ, கோழியோ,மாடோ எதை சாப்பிட்டாலும் அந்த உயிரினத்தின் குணாதிசயங்களும் அதனுடைய தன்மைகளும் நமக்குள் வரும், அதை நீங்கள் மறுக்க முடியாது என்று பேசி இருக்கிறார். இவரின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பலர் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement