ஹீரோ வாய்ப்பு.! வீட்டிற்கு அழைத்த விஜய்.! பல விஷயங்களை பகிர்ந்த சாமி நாதன்.!

0
689
Sami-Nathan
- Advertisement -

விஜய் டி.வி ‘லொள்ளு சபா’ சாமிநாதன் என்றால் தெரியாதவர்களே கிடையாது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை இருந்த இருவர்களில் ஒருவர் சாமிநாதன். மற்றொருவர் எஸ்தர். பிறகு, முழுநேர நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார்.

-விளம்பரம்-
சுவாமிநாதன்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். எனக்கு ஒரு ஹீரோ வாய்ப்பு வந்துச்சு. எனக்கு ஹீரோயின் யார்னு கேளுங்க… மேனகா. ஆனா, நான் ஹீரோவா நடிக்கவே மாட்டேன்னு பிடிவாதமா மறுத்துட்டேன். ஏன்னா, ஹீரோ ஆகிட்டா படங்கள் ஹிட் ஆகணும். அதற்குப் பிறகு ஹீரோ இமேஜிலிருந்து இறங்கி வர முடியாது. அதனால, வேண்டாம்னு சொன்னேன்.

- Advertisement -

விஜய் ஸ்பாட்ல வணக்கம் சொல்லாம போகமாட்டார். ‘நல்லா இருக்கீங்களா’னு விசாரிப்பார். ஸ்பாட்ல ஃபிரீ டைம்ல ‘அந்தாச்சாரி’ விளையாடுறது, கலாய்க்கிறதுனு பொழுதுபோகும். ‘சாமிநாதன் உங்க ஆக்டிங், மாடுலேஷன் எல்லாம் எனக்குப் பிடிக்கும்’னு ஒருமுறை சொன்னார்.

அப்போதான், என் பையனுக்கு நீங்கன்னா உயிர்னு சொன்னேன். ‘நான் அவரைக் கேட்டதா சொல்லுங்க’னு சொன்னார். ஆனந்த்தை ஒருநாள் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கார். போகணும். பையனுக்கு விஜய்ன்னா, என் பொண்ணுக்கு அஜித் பிடிக்கும்

-விளம்பரம்-

Advertisement