போக்கிரி படத்த கலாய்சதால விஜய் கொச்சிட்டார் – அவருக்கு ஐஸ் வைக்க விஜய் டிவி அந்த விழாவ வச்சாங்க.

0
542
vijay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சி நடிகர் விஜய்க்கு எப்போதும் மிகவும் பக்க பலமாகவே இருந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதே போல விஜய்யுடையது தான் விஜய் டிவி என்று நினைத்த 90 கிட்ஸ்களும் உண்டு. பெரும்பாலும் விஜய் டிவி நடத்தும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளில் விஜய்க்கு கண்டிப்பாக விஜய்க்கு விருது வழங்கப்பட்டுவிடும். இப்படி ஒரு நிலையில் விஜய் கோவித்து கொண்டதால் தான் விஜய் டிவி அவருக்கு விருது கொடுத்து ஐஸ் வைத்துவிட்டது என்று லொள்ளு சபா புகழ் சாமிநாதன் கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-
‘Lollu Sabha

லொள்ளு சபா :

சூப்பர்ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாரபட்சம் பார்க்காமல் பாடங்களை தாறுமாறாக கிண்டல் செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நடிகர் நடிகர்கள் தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்கள் சந்தானம் சுவாமிநாதன் பாஸ்கர் என்று பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள்தான். இப்படி ஒரு நிலையில் போக்கிரி படத்தை கலாய்த்து பண்ண போது பல எதிர்புகள் எழுந்தது.

- Advertisement -

போக்கிரி – பேக்கரி :

அந்த எபிஸோடில் விஜய்யுடன் ‘குருவி’ படத்தில் நடித்த ஜீவா தான் விஜய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதனால் அவர் மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் கூட இருந்தனர். அதே போல போக்கிரி படத்தை கேலி செய்ததை பார்த்துவிட்டு விஜய்யே டென்சன் ஆனதாக கூட அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லொள்ளு சபா குழுவினர் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தனர்.

வீடியோவில் 9:27 நிமிடத்தில் பார்க்கவும்

போக்கிரி படத்தால் ஏற்பட்ட பிரச்சனை :

அந்த பேட்டியில் விஜய்யின் போக்கிரி படத்தை கலாய்த்து வெளியான எபிசோட் குறித்து பேசிய லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா ‘ நான் இளையதளபதி விஜய்யின் போக்கிரி படத்தை பேக்கரி என்று செய்திருந்தேன். பின்னர் அந்த ஷூட்டிங்கை எடுத்து முடித்து விட்டு நாங்கள் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அதில் ‘இங்கே எவ்வளவு பிரச்சனை இருக்கிறது நீங்கள் ஆபீஸ் வராமல் அங்கே என்னடா செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

இயக்குனர் சொன்ன விளக்கம் :

நான் உடனே என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு உங்கள் இருவரையுமே விஜய்யும் அவரது தந்தையும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால், தற்போது அதை எல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றும் கூறி இருந்தார். இதை தொடர்ந்து பேசிய நடிகர் ஜீவா , உண்மையில் விஜய் அவர்கள் லொள்ளுசபாவின் மிகப்பெரிய ரசிகர், அதை பார்த்துவிட்டு தான் நான் எனக்கு குருவி படத்திற்கு வாய்ப்பும் கிடைத்தது என்றும் கூறி இருந்தார்.

விஜய்க்கு ஐஸ் வைத்துள்ள விஜய் டிவி :

இப்படி ஒரு நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சாமிநாதன் பேட்டி ஒன்றில் பேசிய போது ‘விஜய் படம் பண்ண போது எஸ் ஏ சி சார் கூப்பிட்டு வச்சி, உங்கள ரசிகர்கள் சும்மா விடமாட்டாங்க என்றெல்லாம் சொன்னார். ஆனால், விஜய் டிவி விஜய்யை அழைத்து பாராட்டெல்லாம் நடத்தி, ஸ்டார் விஜய்னு மாத்த சொன்னாங்க நாங்க தான் விஜய் நம்ம தளபதினு மாத்தாம வச்சி இருக்கோம்னு ஐஸ்லாம் வச்சு சமாதானம் பண்ணிட்டாங்க என்று பேசியுள்ளார்.

Advertisement