ஒரு கல்யாணத்துக்கே இவ்ளோ செலவாகும்,இதுவரை இத்தனை திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன் – லொள்ளு சபா சேஷுவின் இன்னோரு முகம்

0
2126
- Advertisement -

ஆறு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறேன் என்று லொள்ளு சபா நடிகர் சேசு அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக திகழ் பவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல பிரபலங்கள் தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு. இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்ட லொள்ளு சபா நிகழ்ச்சியின் முதல் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

- Advertisement -

நடிகர் சேசு திரைப்பயணம்:

அதன் பின் இவர் வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், திரௌபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பூமர் அங்கிள், ராயர் பரம்பரை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

நடிகர் சேசு அளித்த பேட்டி:

இந்நிலையில் நடிகர் சேசு அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறி இருந்தது, ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். என்னால் முடிந்த அளவிற்கு பணத்தை திரட்டி அந்த பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்கிறேன். நான் மட்டும் இல்லாமல் சந்தானம், யோகி பாபு போன்ற பிற நடிகர்களிடமும் உதவி கேட்டு செய்தேன்.

-விளம்பரம்-

நடிகர் சேசு செய்த உதவி:

அவர்களால் முடிந்த பணத்தை கொடுத்து ஏழைப் பெண்களின் திருமணத்தை செய்து இருக்கிறார்கள்.இதுவரை நான் ஆறு திருமணத்தை செய்திருக்கிறேன். சமீபத்தில் தான் இன்னொரு திருமணம் செய்து வைத்தேன். ஐம்பதாயிரம் வரை பணத்தை திரட்டி கொடுத்தேன். முதலில் அவர்களுடைய குடும்ப சூழல், வருமானத்தையும் தெரிந்து கொண்டு அதற்கு பிறகு எனக்கு தெரிந்த நண்பர்களின் மூலம் உதவி கேட்டு அவருடைய திருமணத்தை நடத்தி வைப்பேன்.

ஒரு வருடத்தில் பத்து திருமணத்தை ஆவது நடத்தி வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கூடிய விரைவில் கண்டிப்பாக செய்வேன் என்று கூறி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர இவரது நல்ல மனதிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கோடி கோடியாய் சம்பாதிக்கும் டாப் நடிகர்களே இது போன்ற உதவிகளை செய்யாத போது சொற்ப சம்பளத்தை பெற்றாலும் மனதால் கோடீஸ்வரராக இருக்கிறார் சேசு.

Advertisement