மகன் தளபதி ரசிகர் மகள் அஜித் ரசிகர். லொள்ளு சபா சுவாமிநாதனின் அழகிய குடும்பம்.

0
7356
swaminthan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது சூப்பர்ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாரபட்சம் பார்க்காமல் பாடங்களை தாறுமாறாக கிண்டல் செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நடிகர் நடிகர்கள் தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்கள் சந்தானம் சுவாமிநாதன் பாஸ்கர் என்று பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள்தான். இதில் ஸ்வாமிநாதன் லொள்ளு சபாவிற்கு முன்பாகவே பிரபலம் தான்.

-விளம்பரம்-

இவர் சினிமா உலகிற்கு வந்து முப்பது வருடங்கள் ஆகிறது. இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் மூலம் தான். அதன் பின்னர் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இன்னும் வரை கூட இவர் ஆர்வத்தோடு படங்களில் நடித்து வருகிறார். இவர் தல அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் நடித்து உள்ளார். அதற்கு பிறகு வேதாளம் என்ற படத்தில் தான் இணைந்து நடித்தார். அதற்கு பிறகு இவர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

அதே போல விஜய்யுடன் வேலாயுதம், தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், இவருக்கு சில என்ற மனைவி இருக்கிறார். அதே போல சுவாமிநாதன் ஷீலா தம்பதியருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் , ஆனந்த் என்ற மகனும் இருக்கிறார். மேலும், இவரது மகள் ஐஸ்வர்யா தீவிர அஜித் ரசிகையாம். அதே போல இவரது மகன் ஆனந்த் தீவிர விஜய் ரசிகராம். இவர் எந்த அளவிற்கு தீவிர ரசிகர் என்றால் தளபதி டி-ஷர்ட்டை ஆடம்பிடித்து வாங்கி போட்டுக்கொண்டாராம்.

-விளம்பரம்-

அதே போல விஜய் சார், தனது மகன் குறித்து கேட்டதாகவும் மேலும், அவரை ஒரு முறை வீட்டிற்கு அழைத்து வர சொன்னதாகவும் கூறினாராம். அதே போல இவரது மகள் விஸ்வாசம் படத்தை பார்க்கும் போது கத்தி ஆராவாரம் செய்து விட்டாராம். அதே போல விஸ்வாசம் படத்தை பார்த்து விட்டு அப்பா மிகவும் கண் கலங்கிவிட்டார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஸ்வாமிநாதன் மகள் ஐஸ்வர்யா.

Advertisement