லண்டன் சொத்து முதல், பல சொகுசு கார்கள் வரை – கமலின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா ? (ஆனா, தேர்தலின் போது தாக்கல் செய்து சொத்து மதிப்பு இவ்ளோ தான்.)

0
508
kamal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

இதையும் பாருங்க : 40 வருஷத்துக்கு முன்னே வந்த கமல்ஹாசனின் Spin Off மூவி – பல இயக்குனர்பா இவரு. இதோ அந்த காட்சி.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். அதோடு இந்த மாபெரும் வெற்றிக்கு கமல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் கமலஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் மற்றும் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கைதி ஆகிய படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த படம் மல்டிவெர்ஸ் படம் என்று கூறப்படுகிறது.

கமல் நடிக்கும் படங்கள்:

விக்ரம் படம் வெற்றி பெற்றதை அடுத்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கமலஹாசன் நன்றி வீடியோவை பதிவிட்டிருந்தார். மேலும், படம் வெளியாகி உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்திருக்கிறது. இதனை தொடர்ந்து கமல் அவர்கள் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் பா.ரஞ்சித் இயக்கத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். அதேபோல் வெற்றிமாறன்-கமல் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது.

-விளம்பரம்-

கமலஹாசனின் சொத்து மதிப்பு:

இந்நிலையில் கமலஹாசனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கமலஹாசனின் மொத்த சொத்து மதிப்பு 177 கோடி. Koimoi அறிக்கையின்படி கமலஹாசன் சென்னையில் தான் நிறைய சொத்துக்களை வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட இவர் தன்னுடைய முழு குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்காக தன்னுடைய அரண்மனை குடும்ப வீட்டை புதுப்பித்து இருந்தார். அதில் அவரது மகள்கள், நடிகைகள் உட்பட பல பேர் கலந்து கொண்டிருந்தனர்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டபோது தனக்கு சொந்தமாக 131 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாகவும், விவசாய நிலம் உட்பட (இதன் மதிப்பு 17 கோடி) சொத்து இருப்பதாகவும் கூறி இருந்தார்.

சொத்து விவரம் :

சென்னையில் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் 19 கோடி மற்றும் ரியல் எஸ்டேட் இடங்கள் 92.5 கோடி. லண்டனில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு உள்ளது. விக்ரம் படத்திற்கு முன்பு கமலஹாசன் அவர்கள் கடைசியாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இருந்தார். அதில் சுமார் 25 கோடி இருந்து 30 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் தற்போது அவர் தயாரித்த விக்ரம் படத்திற்கு 50 கோடி ரூபாய். மேலும், கமல் வீட்டில் BMW 730 Ld மற்றும் Deluxe Lexus Lx 570 வகை சொகுசு கார்கள் 3.69 கோடி என்றும் கூறப்படுகிறது.அதே போல லண்டனில் சொந்தமாக சொத்தும் இருக்கும். அதன் மதிப்பு சுமார் 2.5 கோடி. இதனால் இவர்கள் குடும்பத்தினர் அடிக்கடி லண்டன் செல்வதும் வழக்கம்.

Advertisement