நீங்க தனுஷ் மாதிரி நடிக்க Try பண்றீங்களா – ரசிகர்களின் பலரின் சந்தேகத்திற்கு லவ் டுடே இயக்குனர் சொன்ன பதில்.

0
569
love
- Advertisement -

நீங்கள் தனுஷ்ஷை Imitate செய்கிறீர்களா என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு ‘லவ் டுடே’ பட இயக்குனரும் நாயகனுமான பிரதீப் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே.

-விளம்பரம்-

இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் பிரதீப் அவர்களின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு ஹீரோவை போல் அல்லாமல் தனுஷ் போன்று பக்கத்து வீட்டு பையன் போல இவரது தோற்றமும் நடிப்பும் தான் இந்த படத்திற்கு பக்க பலமாக இருந்தது என்று சொல்லலாம். இந்தப் படத்தின் பல காட்சிகளில் இவரது நடிப்பு பிரபு தேவா எஸ்.ஜே சூர்யா தனுஷ் போன்றவர்களின் நடிப்பை நினைவு படுத்தியது போல இருந்தது.

அதிலும் குறிப்பாக பல காட்சிகளில் இவரது நடிப்பில் தனுஷை இமிடேட் செய்வது போலவே இருந்தது.சொல்லப்போனால் இவர் இயக்கிய முதல் படமான கோமாளி திரைப்படத்தில் பிரபுதேவா தான் நடிக்க இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரதிபிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் படத்தில் உங்களை பார்க்கும் போது தனுஷை பார்ப்பது போலவே இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

அதேபோல திரைக்கதையை போல பாக்கியராஜ் போல இருக்கிறது இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பிரதீப் ‘நீங்க சொல்வதை பார்த்தால் இதில் கொஞ்சம் அதுல கொஞ்சம் என்று மிக்சி மாதிரி தான் இருக்கிறது. அது அப்படியெல்லாம் இல்லை நீங்கள் சொல்லும் பெயர்களை எல்லாம் மிகப்பெரிய பெயர்கள் நான் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த பத்திரிக்கையாளர் நீங்கள் அழும் போது கூட தனுஷ் சார் மாதிரி Body Language, style எல்லாம் அப்படியே இருக்கிறது என்று சொன்னதற்கு ஒருவேளை உத்தமன் பிரதீப் அப்படி பண்ணுகிறார் என்று நினைக்கிறேன்,இந்த கதாபாத்திரத்திற்கு நான் ஒரு வடிவம் வைத்து இருந்தேன் அதை தான் நான் செய்தேன் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த படம் தனுஷ் சாருக்காக பண்ணாதா என்று கேட்டதற்கு இல்லை இது எனக்காக பண்ண கதை என்றும் கூறியுள்ளார்.

Advertisement