‘எனக்கு ஜொரம் வந்தா அவனுக்கும் வரும்’ பேட்டியில் தன் twin சகோதரனை நினைத்து கண் கலங்கிய லவ் டுடே நடிகை இவானா.

0
1469
ivana
- Advertisement -

பேட்டியின் போது லவ் டுடே நாயகி இவானா கண்கலங்கி அழுதிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு, வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி இருந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

லவ் டுடே படம்:

காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் இவானா – பிரதீப் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு இவானாவின் அப்பா சத்யராஜ் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

இவானா குறித்த தகவல்:

இதனால் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் சமாளித்து அவர்கள் காதலில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும், லவ் டுடே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை இவானா. இவருடைய உண்மையான பெயர் அலினா ஷாஜி. இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுலகில் அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-

இவானா திரைப்பயணம்:

இவருக்கு இவானா என பெயர் வைத்தது இயக்குனர் பாலா தான். ஆனால், அதற்கு முன்பே இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த ஹீரோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக இவானா வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதனை அடுத்து இவனாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பேட்டியில் கண்கலங்கிய இவானா:

இந்நிலையில் பேட்டியில் இவானா கண்கலங்கிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, இவானா தன் குடும்பத்தை பற்றி பேசி இருக்கிறார். பின் அவர் இரட்டை குழந்தைகள் என்றும் சகோதரர்
குறித்து பேசும்போது தான் அழுது இருக்கிறார். அதில் அவர், நான் அவனை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். ஐந்து நிமிடம் முன்னாடி நான் பிறந்தேன். இருந்தாலும், எனக்கு பெரியவனாக தான் நிறைய அறிவுரை சொல்லுவான். 12 ஆம் வகுப்பு படிக்கும் போது அவன் உயர் படிப்புக்காக கனடா சென்று விட்டான். சிறு வயதில் நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருப்போம். ரொம்ப சந்தோஷமாக இருக்கும். எனக்கு காய்ச்சல் வந்ததென்றால் அவனுக்கும் வரும். இருவருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். அவன் இப்போது இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. நாச்சியார் படத்தின் போது வந்திருந்தான் என்று கூறியிருந்தார்.

Advertisement