'லப்பர் பந்து' நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் செய்திதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் தான் 'லப்பர் பந்து'. இந்தப் படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பாலா சரவணன், டிஎஸ்கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட், மௌனிகா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவி ஸ்வாசிகாவுக்கு பிடிக்கவே பிடிக்காது.
லப்பர் பந்து படம்:
இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்து வீச்சில் பட்டய கிளப்புபவர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷ் உடைய திறமையை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். இவர்கள் இவருக்கும் இடையே நடக்கும் போட்டோ போட்டிகள், பொறாமைகள், தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறி இருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.

நடிகை மௌனிகா:
இந்நிலையில் 'லப்பர் பந்து' படத்தில் நடித்த நடிகை மௌனிகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரல் ஆகி வருகிறது. மௌனிகா ரப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணின் முன்னாள் காதலியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே மௌனிகா வந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மௌனிகா வேறு யாருமல்ல, பிளாக் ஷீப் வீடியோஸ், கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமானவர்தான்.
மௌனிகா- சந்தோஷ் நிச்சயதார்த்தம்:
சமீபத்தில் தான் நடிகை மௌனிகா- சீரியல் நடிகர் சந்தோஷ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. இவர்களின் நிச்சியதார்தத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் பங்கு பெற்று வாழ்த்தி உள்ளார்கள். நடிகர் சந்தோஷ், கடந்த 2023 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் கதாநாயகனாக நடித்தவர்.
View this post on Instagram
சந்தோஷ் குறித்து:
இவர் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலுக்கு பிறகு ஒரு சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான 'அண்ணா' சீரியலிலும் நடித்து வந்தார். திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிய சந்தோஷ், தற்போது சினிமாவில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. தற்போது சந்தோஷ்-மௌனிகா நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகும் நிலையில், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.






