லப்பர் பந்து படத்தின் கதாநாயகியின் கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தின் வைரலாகி வருகிறது. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் தான் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை எஸ்.லட்சுமணன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டிஎஸ்கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தில் அட்டகத்தி தினேஷ் கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் ஆர்வம் சிறந்த வீரராக இருக்கிறார். இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்துமே சிக்ஸர் தான். இவர் விளையாடும் டீம் தான் கோப்பையை தட்டிச் செல்லும். ஆனால், இவர் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய மனைவி ஸ்வாசிகாவுக்கு பிடிக்கவே பிடிக்காது.
லப்பர் பந்து படம்:
இன்னொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் பந்துவீச்சில் பட்டய கிளப்புபவர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தினேஷுடைய திறமையை தெரிந்த ஹரிஷ் கல்யாண் எப்படியாவது அவரை விக்கெட் எடுக்க வேண்டும் என்று வெறியுடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள் என்று தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. சமூகத்தில் நடக்கும் ஆதிக்கத்தையும் எதார்த்தமாக கூறியிருக்கும் இப்படம் பலரது பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.

ஸ்வாசிகா குறித்த தகவல்:
மேலும், இந்த படத்தில் கெத்து தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்வாசிகா. இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தது. இவர் இதற்கு முன்பே நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வைகை என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப்பின் இவர் கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

ஸ்வாசிகா திருமணம்:
அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளத்திலும் சீரியல்களிலும் நடித்திருந்தார். அப்போது இவர் தன்னுடன் நடித்த நடிகர் பிரேமை காதலித்தார். இவர்கள் இருவருமே சில வருடமாக காதலித்து வந்தார்கள். பின் ஒரு வழியாக இவர்கள் இரு வீட்டாரிடமும் சம்மதம் வாங்கி இருந்தார்கள். பின் கடந்த ஜனவரி மாதம் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. திருமணத்திற்க்கு பிறகும் நடிகை ஸ்வாசிகா கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் .

ஸ்வாசிகா கணவர் குறித்த தகவல்:
இந்த நிலையில் நடிகை ஸ்வாசிகாவின் கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்வாசிகா கணவர் பிரேம் ஜேக்கப். இவர் வேற யாரும் இல்லை, 'நீ நான் காதல்' தொடரின் ஹீரோ. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியலில் இதுவும் ஒன்று. இந்த சீரியல் மூலம் தான் நடிகர் பிரேம் தமிழில் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு முன் இவர் மலையாளத்தில் ஏராளமான சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.






