‘லக்கி பாஸ்கர்’ விமர்சனம் – அமரன், பிளடி பெக்கர் படங்களுக்கு இடையே சத்தமில்லாமல் செய்கை செய்த துல்கர்

0
208
- Advertisement -

இந்த தீபாவளிக்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடித்து தெலுங்கில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘லக்கி பாஸ்கர்’. இயக்குனர் வெங்கி அட்லூரி தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, ராஜ்குமார் காசிரெட்டி, ராங்கி, ஹைப்பர் ஆதி, சாய்குமார், சச்சின் கெடேகர், சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிதி சார்ந்த குற்றங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

பேங்கில் கேஷியர் வேலை பார்த்து மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார்(துல்கர்). குடும்ப சூழல், கடன் நெருக்கடியால் முதல்முறையாக பாஸ்கர் நேர்மை தவறும் சூழல் உருவாகிறது. அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் கண்ட ஏற்ற இறக்கங்கள், சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. இந்த கதை 1989இல் நடக்கிறது. த்ரில்லர் படத்திற்கான அம்சங்களை கொண்டுள்ள இந்த படம் நிதி குற்றங்கள் குறித்துப் பேசும் ஒரு பீரியட் திரில்லர் என்று கூறலாம். இந்த படத்தில் ஒரு நடுத்தர வர்க்க மனிதரை கதையின் முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் வடிவமைத்திருப்பதால் ரசிகர்களால் தங்களை துல்கருடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

- Advertisement -

படத்தில் பாஸ்கராக வரும் துல்கர் சல்மான் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார். குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் போது அப்பாவியாக இருக்கும் இவர், ஒரு கட்டத்தில் வாழ்வில் உயரும் போது பணக்கார தோரணைக்கு மாறுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கொடுத்து, திரையை விட்டு நகர விடாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் திரைக்கதையை இயக்குனர் வடிவமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான வசனங்கள் கைதட்டலை பெறுகின்றன. மீனாட்சி சௌத்ரி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராம்கியும், சாய்குமாரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் வலு சேர்த்துள்ளனர்.

1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கதை நடப்பதும், அதற்கு ஏற்றார் போல் காட்சி அமைப்புகள் இருப்பது நம்மை 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறது. பேங்கில் மோசடி, ஸ்டாக் மார்க்கெட் போன்ற காட்சிகள் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கின்றது. துல்கர் சல்மான் போடும் திட்டங்கள், அவை வெளிப்படும் விதம் எல்லாமே ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக ஜிவி பிரகாஷ் பின்னணி இசை படம் முழுவதும் வலு சேர்க்கிறது. தீபாவளி முன்னிட்டு வெளியான இப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

நிறை:

துல்கர் சல்மானின் நடிப்பு

விறுவிறுப்பான திரைக்கதை

சுவாரசியமான காட்சிகள்

குறை:

பின்னணி இசை நன்றாக இருந்தாலும், பாடல்கள் சுமார்தான்

மற்றபடி படத்தில் குறைகள் பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் ‘லக்கி பாஸ்கர்’ இந்த தீபாவளிக்கு அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படம்

Advertisement