அத நாங்க எப்போதோ செஞ்சிட்டோம். விபத்திற்கு நீங்க தான் பொறுப்பு. கமலுக்கு லைக்கா கடிதம்.

0
1775
kamalvslyca
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தியன் 2 அகர்வால் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. 19.2.2020 அன்று இரவு படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

-விளம்பரம்-
கமல்ஹாசன்

- Advertisement -

அப்போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து உள்ளார்கள். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் இழப்பால் ஒட்டுமொத்த படக்குழுவும் சோகத்தில் உள்ளது. இந்த விபத்தில் இயக்கும் ஷங்கர், கமல், காஜல் அகர்வால் ஆகிய மூவரும் நூலிழையில் உயிர் தப்பினார்கள் என்பது குறிபிடத்தக்கது.

மேலும், திரையுலகில் பலர் இந்தியன் 2 படத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதலையும் கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இன்சூரன்ஸ் செய்யப் படவேண்டும் என்று சோசியல் மீடியாவில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து லைகா தயாரிப்பு நிறுவனத்தின் குழும தலைவர் சுபாஸ்கரன் அவர்களுக்கு கமலஹாசன் அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

-விளம்பரம்-
Image result for kamal and lyca

அதில் அவர் கூறியிருப்பது, இனிமேல் தயாரிக்கும் படங்களில் கதாநாயகன் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு லைகா தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரன் அவர்கள் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். அவர்களின் குடும்பத்துக்கும் 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

உங்களின் கடிதம் கிடைப்பதற்கு முன்பே நாங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்துவிட்டோம். உலகில் தலைசிறந்த கலைஞர்களான கமல், சங்கர் இன் கட்டுப்பாட்டில் இந்தியன் 2 சூட்டிங் நடைபெறுவதால் பாதுகாப்பில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்று நாங்கள் நம்பினோம். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்து விட்டது. இதற்கு அனைவரும் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும், சூட்டிங்கில் ஊழியர்களுக்கும், கலைஞர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் தேசிய மயமாக்கப்பட்ட காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இக்கடிதத்தின்மூலம் இந்தியன் -2 படப்பிடிப்புக்கு முழு பொறுப்பும் தயாரிப்பு நிர்வாகிகளும், கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும்தான் என்கிறது லைக்கா. கமல்ஹாசனும், இயக்குநர் ஷங்கரும் என்ன பதில் தரப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement