-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பாடலைப் பாடிவிட்டு ஓகேவா என்று கேட்ட விஜய், யுவன் சொன்ன பதில் – ‘கோட்’ இரண்டாவது பாடல் குறித்து கபிலன் வைரமுத்து

0
89

‘கோட்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்து பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த சில தினங்களுக்கு முன் தான் நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். மேலும், விஜயின் ‘கோட்’ படத்திலிருந்து சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த பாடலை விஜய் பாடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. மறைந்த பாடகி பவதாரணி குரல் ஏஐ மூலம் தான் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். இதற்கு ‘TimelessVoices.ai’ என்ற நிறுவனம் உதவி இருக்கிறது. இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் பதிவு போட்டிருந்தார். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

‘கோட்’ இரண்டாவது பாடல்:

மேலும், இந்த பாடல் இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு காரணம் பவதாரணி குரல் என்று சொல்லலாம். அதோடு இந்த பாடலின் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. இந்நிலையில் ‘கோட்’ படத்தின் பாடல் தொடர்பாக அளித்த பேட்டியில் கபிலன் வைரமுத்து, இந்த பாடல் நிச்சயமாக நல்ல வரவேற்பை பெறும் என்று எனக்கு தெரியும். ஆனால், நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் விஜய் சாருக்கும், வெங்கட் பிரபுவுக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். இது இரண்டு பேருக்குமே எழுதிய முதல் பாடல்.

கபிலன் வைரமுத்து பேட்டி:

-விளம்பரம்-

வெங்கட் பிரபுவுடன் ‘கோட்’ படத்தில் தான் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அவர் சொல்லும் போது யார் பாடுறாங்க என்று எனக்கு தெரியாது. அதற்குப் பிறகுதான் பவதாரணி உடைய குரலை பயன்படுத்தி இருக்காங்கன்னு தெரிந்தது. எனக்கு அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அவருடைய இழப்பு தமிழ் திரை உலகுக்கு பேரிழப்பு. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே உலக அளவில் இந்த பாடல்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. பொதுவாகவே ஒரு பாடலுக்கு வரிகளை எழுதிக் கொடுக்கும் போது நிறைய மாற்றம் சொல்வார்கள். ஆனால், நான் ஒரே வெர்சன் தான் கொடுத்தேன். அதுவே ஓகே ஆகிவிட்டது.

-விளம்பரம்-

பாடல் குறித்து சொன்னது:

விஜய் சார் பாட்டு பாடி முடித்ததும் எல்லாம் ஓகேவா இன்னும் வேற ஏதாவது பண்ணனுமா என்று யுவன் கிட்ட கேட்டார். ஐந்து நிமிடம் யோசித்து யுவன், சூப்பர் என்று சொல்லிவிட்டார். உடனே என்னை பார்த்து விஜய் சந்தோசமாக சிரித்தார். அதிலேயே அவருக்கு எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்று தெரிந்தது. சோசியல் மீடியாவில் இந்த பாட்டுக்காக வருகிற கமெண்ட்ஸை பார்க்கும்போது வார்த்தைக்கு அளவே இல்லை. எல்லோரைப் போலவும் நானும் திரையில் படத்தை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த பாடல் ஹிட் ஆகுவதற்கு முதல் காரணம் பவதாரணி குரல்.

விஜய் குறித்து சொன்னது:

விஜய் சார் பாடி முடித்ததும் யுவன் பிளே பண்ணி காண்பித்தார். பவதாரணி குரல் என் மனதை என்ன செய்ததோ அந்த உணர்வுதான் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களிடமும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது. அதே போல் இந்த பாடல் ஹிட்டுக்கு விஜய் சார் இரண்டாவது காரணம். அவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய் சார் ரெக்கார்டிங் ஸ்டுடியோ வந்தபோது, யுவனிடம் முதல் முறையாக வாய்ப்பு கேட்டு வர ஒரு சாதாரண நபர் எப்படி வருவாரோ அதே மாதிரிதான் பவ்வியமாக, பணிவாக வந்தார். யுவன் இப்படி பாடுங்க, அப்படி பாடுங்க என்று சொல்லும் போது அதை அப்படியே கேட்டுக் கொண்டு விஜய் பாடினார். என்னைப் பார்த்து செம்மையா எழுதி இருக்கீங்க, பாடல் வரிகள் எல்லாம் சூப்பராக இருக்கு என்று கைகுலுக்கி பாராட்டினார். மூன்றாவது யுவனுக்கு தான் எல்லாப் புகழும் சேரும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news