கை கால் விழுந்துடிச்சி, நடக்க முடியல, இந்த வெங்கல் ராவ்க்கு உதவி செய்ங்க – கலங்க வைக்கும் காமெடி நடிகரின் வீடியோ

0
76
- Advertisement -

வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் நடித்த காமெடி நடிகர் வெங்கல் ராவ் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். பின் இடையில் சில பிரச்சனைகளால் சில ஆண்டு காலமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். வடிவேலு படங்களில் நடிக்காமல் போனதில் இருந்து அவருடன் நடித்த பல நடிகர்களும் வாய்ப்பு இல்லாமல் தவித்து இருந்தார்கள். அந்த வகையில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தவர் நடிகர் வெங்கல் ராவ். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் சினிமா வாழ்க்கையில் சுமார் 25 வருடமாக ஃபைட் மாஸ்டராக இருந்தவர்.

- Advertisement -

நடிகர் வெங்கல் ராவ் குறித்த தகவல்:

பின்னர் இவர் உடல் ஒத்துழைக்காததால் நடிப்பு பக்கம் வந்துவிட்டார். ‘நீ மட்டும்’ படம் மூலம் இவர் முதல் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு பல இவர் படங்களில் காணவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெங்கல் ராவ் சிறுநீரகக் கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

வெங்கல் ராவ் பேட்டி:

சிகிச்சைக்கு பின் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், நான் சினிமாவில் பைட் மாஸ்டர் ஆக தான் நுழைந்தேன். அதற்கு பிறகு என்னால் சண்டை காட்சிகளில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் வடிவேல் சாரை சந்தித்து எனக்கு வாய்ப்பு கேட்டேன். உடனே அவரும் என்னைப் பார்த்துவிட்டு வாய்ப்பு தந்தார். வடிவேல் அண்ணா இல்லை என்றால் நான் இங்கு இப்ப இந்த நிமிடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. என் வாழ்க்கையில் பெரும் உதவி செய்தவர் வடிவேல் அண்ணா.

-விளம்பரம்-

வடிவேலு குறித்து சொன்னது:

அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என்னைப்போல் பல பேரை வாழ வைத்திருக்கிறார். அவர் சினிமாவில் இல்லாதது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நானும் அவரிடம் போய் வாய்ப்பெல்லாம் கேட்கவில்லை. ஆனால், என் சிங்கம் இப்போது வந்ததால் இனிமேல் எனக்கு கவலை இல்லை என்று கூறி இருந்தார். அதோடு பல வருடங்களுக்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலுடன் வெங்கல் ராவ் நடித்து இருந்தார்.

நடிகர் வெங்கல்ராவ் வீடியோ:

அதற்கு பின் பெரிதாக இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் நடிகர் வெங்கல் ராவ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், வணக்கம் எனக்கு கை, கால் விழுந்திடுச்சு. நடக்க முடியல, பேச முடியல. சிகிச்சை எடுக்க ஹாஸ்பிடலுக்கு காசு இல்லை. மருந்து கூட வாங்க முடியல. சினிமா நடிகர்கள், சங்கங்கள் உதவி செய்யுங்க. உங்களால முடிந்த உதவி செய்யுங்க. இதுக்கு மேல என்னால பேச முடியல என்று கூறியிருக்கிறார்.

Advertisement