சீரியலில் களமிறங்கி இருக்கும் பாடலாசிரியர் சினேகன், எந்த சேனல் தெரியுமா? – வெளியானது அதிகாரபூர்வ தகவல்

0
345
- Advertisement -

பாடலாசிரியர் சினேகன் தற்போது சீரியலில் களமிறங்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. அதோடு இவர் இதுவரைக்கும் 600 திரைப்படப் பாடல்கள் மேல் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவை சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான்.

-விளம்பரம்-

இருந்தாலும் இவர் பிரபலம் ஆகியது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருந்த ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த சீசனில்ஆரவ் வெற்றி பெற்ற நிலையில், சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் கமலின் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சீரியலில் சினேகன்:

தற்போது சினேகன் புதிய சீரியலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப போகும் இந்த சீரியலை இயக்குனர் பிரியன் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். மேலும் சினேகன் நடிக்கப் போகும் சீரியலுக்கு ‘பவித்ரா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பவித்ரா சீரியல்:

மேலும், இந்த சீரியலில் அனிதா சம்பத் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த செய்தியை கலைஞர் டிவியே அதிகாரபூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் கேப்ஷனில், ‘கதாநாயகி யார் என்று சொல்லுங்க பார்ப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்கள். இந்தச் செய்தியை அறிந்த ரசிகர்கள் அனைவரும் ஹீரோயின் யாராக இருப்பார் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் சினேகன் மற்றும் அனிதா சம்பத்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சினேகா- கன்னிகா திருமணம்:

இதனுடைய சிநேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். சுமார் 10 ஆண்டுகளாக சினேகன்- கன்னிகா இருவரும் காதலித்து இருந்தார்கள். பின் இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு படு விமர்சையாக நடந்திருந்தது. மேலும், கன்னிகா வேற யாரும் இல்லைங்க, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கன்னிகா திரைப்பயணம்:

இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். பின் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகன்- கன்னிகா திருமணம் குறித்து பல பேர் விமர்சித்து இருந்தார்கள். காரணம் இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வித்தியாசம் என்பதுதான். இருந்தாலும் இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு தங்களுடைய வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement