பிரபல பாடலாசிரியர் சினேகன், குழந்தை வேண்டாம்னு முடிவெடுத்திருந்தோம் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500க்கும் அதிகமான பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான்.

இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் என்று சொல்லலாம். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
சினேகன் – கன்னிகா திருமணம்:
அதாவது சுமார் 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சையாக திருமணம் நடந்தது. கன்னிகாவும் ஒரு நடிகை தான். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த ‘கல்யாண வீடு’ என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/shorts/bZ--mNU86Sw
சினேகன் – கன்னிகா குறித்த தகவல்:
மேலும், இவர்கள் இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆழமாகக் காதலித்து தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அதோடு இவர்களுக்கு திருமணமாகி வருடங்கள் சில கடந்தாலும், இருவருமே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இது குறித்த பலருமே ஏன்? எதற்கு? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். இருந்தாலுமே, இருவரும் மௌனம் காத்து வந்தார்கள்.
இரட்டை குழந்தை:
இதையடுத்து கடந்த ஆண்டு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அதன் பின் கன்னிகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதன் பின், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி சினேகன் - கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இந்த செய்தியை இவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட பலருமே சினேகன்- கன்னிகா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், சினேகன் ஒரு பேட்டியில் கூறி இருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை வேண்டாம் என்று இருந்தோம்:
அதில், கல்யாணம் பண்ணி மூணு வருஷத்துக்கு குழந்தை வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்து வைத்திருந்தோம். ஏனென்றால், காதலித்த அந்த ஏழு வருஷமும் நாங்கள் எங்கேயுமே சுத்தினது கிடையாது. அதனால் தான் இந்த சினிமா உலகில் அதை மறைத்து வைத்திருக்க முடிந்தது. எங்களை எங்கேயுமே ஜோடியாக பார்த்திருக்க முடியாது. அதனால் திருமணமாகி இரண்டரை வருஷத்திற்குநாம் ஜாலியா சுற்றுவோம், அப்ப சுற்றாத்தை எல்லாம் இப்போ சுற்றுவோம் என்று இருந்தோம். கன்னிகாக்கு மலைப் பிரதேசங்களும், குளிர் பிரதேசங்களும் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி இடங்களுக்கு நானே டிரைவர், கன்னிகா நடத்துனர் என்பது போல் நிறைய சுற்றினோம் என்று சினேகன் கூறியுள்ளார்.






