24ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டாம்.! சர்கார் பாடல் பற்றி தகவல் வெளியிட்ட பாடலாசிரியர் விவேக்.!

0
261
vivek

இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வருடம் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவை வெகு விமர்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இசை வெளியிட்டு விழாவிற்கு முன்பாக வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி “சர்கார்” படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஒன்று வெளியாகவுள்ளது. மேலும், இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

பாடலாசிரியரான விவேக் விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் இடம்பெற்ற “ஆளப்போறான் தமிழன் ” பாடலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் “சர்கார்” படத்திலும் “ஆளப்போறான் தமிழன் ” போன்று ஒரு மாஸான பாடல் இருக்கிறதா என்று ரசிகர்கள் அனைவரும் பாடலாசிரியர் விவேக்கை ட்விட்டரில் வினாவி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த பாடலாசிரியர் விவேக், சர்காரில் “ஆளப்போறான் தமிழன் ” போன்ற பாடல் இடம்பெறாது. இந்த படம் வித்யாசமான கதை மற்றும் இது ஒரு வித்யாசமான படம். பாடல் வெளியானதும் எந்த அளவிற்கு நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்பதை நான் பொருத்திருந்து பார்க்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.