‘எங்கே போனாள் தெரியவில்லை’ – தற்கொலை செய்துகொண்ட மகள் குறித்து கபிலன் எழுதிய கண்ணீர் கவிதை

0
568
kabilan
- Advertisement -

தற்கொலை செய்துகொண்ட மகள் குறித்து கண்ணீர் மல்க கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் கபிலன். இவர் புதுச்சேரியில் பிறந்தவர். விக்ரம் நடித்த தில் என்ற படத்தில் உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா! என்ற பாடலை எழுதி தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் கபிலன்.அதன் பின்பு இவர் ஆள்தோட்ட பூபதி, அர்ஜுனரு வில்லு, மச்சான் பேரு மதுர, ஆடுங்கடா என்ன சுத்தி, மெர்சல் ஆயிட்டேன், என்னோடு நீ இருந்தால் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி சினிமா திரை உலகில் கபிலன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார். இவருடைய பாடல்கள் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.மேலும், இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால் சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசனின் தசாவதாரம் படத்திலும் கபிலன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கபிலன் மகன் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது திரைதுறை மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும், தூரிகையின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தான் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தன் மகளின் பிரிவால் வாடும் கவிஞர் கபிலன் தன் மகளை எண்ணி உருக்கமான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

எல்லா தூக்க மாத்திரைகளையும்
அவளே போட்டுக் கொண்டால்
நான் எப்படி தூங்குவேன்..!

எங்கே போனாள்
என்று தெரியவில்லை
அவள் காலனி மட்டும்
என் வாசலில்..!

மின் விசிறி
காற்று வாங்குவதற்கா..
உயிரை வாங்குவதற்கா..?

அவள் கொடுத்த
தேனீர் கோப்பையில்
செத்து மிதக்கிறேன்
எறும்பாய்..?

அவளுக்கு
கடவுள் நம்பிக்கை
இருக்கா இல்லையா
எனக்குத் தெரியாது
அவளே என் கடவுள்..!

குழந்தையாக
அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற
பாரம் இன்னும் வலிக்கிறது.
கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா
கண்களின் வலி.

யாரிடம் பேசுவது
எல்லா குரலிலும்
அவளே பதிலளிக்கிறாள்.

கண்ணீரின் வெளிச்சம் வீடு
முழுக்க நிரம்பி இருக்க
இருந்தாலும் இருக்கிறது
இருட்டு.

பகுத்தறிவாளன்
ஒரு கடவுளை
புதைத்து விட்டான்..!

Advertisement