நடிகர் ரஜினிகாந்த் குறித்து பழம்பெரும் இயக்குனர் எம். பாஸ்கரின் மகன், பாலாஜி பிரபு அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது ரஜினி நடித்திருக்கும் 'வேட்டையன்' படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பழம்பெரும் இயக்குனர் எம்.பாஸ்கர் அவர்களின் மகன் பாலாஜி பிரபு, ரஜினி குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார். அதில், ரஜினி சார் முதலில் வில்லனாக தான் நடிச்சிட்டு இருந்தார். அவரோட கேரியரில் 'பைரவி' 26 ஆவது படம். அந்தப் படத்தை என்னுடைய அப்பா எம்.பாஸ்கர் தான் இயக்கினார். அதுவரைக்கும் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினியை ஹீரோவாக காட்ட என்னென்ன யுக்தி பண்ண முடியுமோ எல்லாவற்றையும் எனது அப்பா செய்தார்.
பாலாஜி பிரபு பேட்டி:
அந்த படத்துக்கு நிறைய பைனான்ஸ் கஷ்டங்கள் வந்தது. எல்லா கஷ்டங்களையும் தாண்டி அந்த படத்தை என்னுடைய அப்பா எடுத்து முடித்தார். 1978 ல் ஜூன் மாதம் 'பைரவி' படம் ரிலீஸ் ஆச்சு. படம் வந்ததுக்கு அப்புறம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. ரஜினி சாருக்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்ததே அந்தப் படம் தான். பைரவி படத்திற்கு பிறகு ரஜினி சார் பெரிய உயரத்திற்கு போயிட்டாரு என்றுதான் சொல்லணும்.
https://www.youtube.com/watch?v=14axgv20Xh8
நன்றி மறந்த ரஜினி:
அதுக்கப்புறம் என்னுடைய அப்பா போயிட்டு சில கதைகள் ரஜினி சார் கிட்ட சொல்ல, நான் இப்போ பெரிய பேனர் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன் என்று ரஜினி சார் சொல்லி இருக்காரு. அதற்கு அப்பாவும் அதுதான் உங்க பாலிசி என்றால் ஓகே என்று சொல்லிட்டு வந்து விட்டார். சில வருடங்களுக்குப் பிறகு, ரஜினி சார் அப்பாவிடம் படம் பண்ணலாம் என்று கேட்டதற்கு, நான் இப்போ என்னுடைய சொந்த படங்கள் மட்டும் தான் பண்றேன். நீங்க பண்ற அளவுக்கு என்னுடைய பேனர் பெரிய பேனரான்னு தெரியலன்னு சொல்லிட்டார்.
எந்த மேடையிலும் சொல்லவில்லை:
நான் ரஜினி சாரோட பெரிய ரசிகன் தான். கடந்த 46 வருஷங்களா நான் அவரை பாலோ பண்ணிட்டு இருக்கேன். எங்கேயுமே அவர் என்னை ஹீரோவா அறிமுகப்படுத்தியது எம்.பாஸ்கர் சார் தான் என்று சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேங்கிறாரு ஏன்னு தெரியலை. ஆனா, அவர் பாலச்சந்தர் சார் மற்றும் மகேந்திரன் சாரை பற்றி மட்டும் பல மேடைகளில் பேசுகிறார். என்னுடைய அப்பா அதை எப்பவும் எதிர்பார்த்தது கிடையாது. ஆனா, எங்க குடும்பத்திற்கு அந்த வருத்தம் எப்பவுமே இருக்கும்.

மறைவுக்கு கூட வரவில்லை
அதே மாதிரி 2013 ஜூலை 12ஆம் தேதி, என்னுடைய அப்பா இறந்துட்டாரு. அப்போ எல்லா செய்திகளிலும் பிளாஷ் நியூஸ் அப்பாவை பத்திதான் போட்டு இருந்தாங்க. அப்பாவோட மறைவுக்கு ரஜினி சார் வருவார் என்று நாங்கள் ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனா, அவரு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கல. அதுக்கு அடுத்த நாள் ஒரு பிரபல நடிகை இறந்துட்டாங்க. அங்க மட்டும் ரஜினி சார் போயிருக்காரு. அதை நாங்க டிவியில் பார்த்து தெரிஞ்சுகிட்டோம். இந்த வருத்தம் எல்லாம் எங்க குடும்பத்திற்கு எப்பவுமே இருக்கு என்று பாலாஜி பிரபு ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.






