‘வக்கீல் கேட்டும் இறுதி வரை அதை சொல்லவே இல்லை – எம் ஆர் ராதாவின் நேர்மையை பாருங்க.

0
1352
- Advertisement -

தமிழ் திரையுலகில் மிகப் பிரபல நடிகராக வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. அவரது வாரிசுகள் தான் பிரபல நடிகர் ராதாரவி மற்றும் பிரபல நடிகை ராதிகா சரத்குமார். நடிகர் எம்.ஆர்.ராதா அவரது படங்களில் பேசும் வசனங்கள் மற்றும் அவர் பேசும் ஸ்டைல் தான் இன்றளவும் மக்கள் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி நடிகர் எம்.ஆர்.ராதா பிறந்த தினம். எம்.ஆர்.ராதா பிறந்த தினம் என்பதால், அவரது மகளும், பிரபல நடிகையுமான ராதிகா சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவை பற்றி ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-37.jpg

அந்த பதிவில் “இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) ஒரு ராக் ஸ்டாரின் பிறந்த நாள். அவர் தான் எம்.ஆர். ராதா. அவருக்கு என சில தனி கொள்கைகளுடன் வாழ்ந்தவர். வழக்கறிஞர்கள் எம்.ஆர்.ராதாவை நீதி மன்றத்தில் பொய் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போது, நன்றாக சிரித்து விட்டு. தயவு செய்து என்னிடம் அதை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள்.

- Advertisement -

எனது வாழ்வில் இதுவரை நான் செய்யாத ஒரு செயல் அது. எது நடந்தாலும் பரவாயில்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன்” என்று சொன்னார் என ராதிகா குறிப்பிட்டிருக்கிறார் இப்படி இரு பதிவை போட்டதுடன், எம்.ஆர். ராதாவின் ஒரு புகைப்படத்தையும் ராதிகா ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.

நடிகை ராதிகாவின் இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேத்தி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அவர் தான் ரயனே மிதுன். இவர் நடிகை ராதிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாவது குழந்தை கூட பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement