தெரு முனைய கூட தாண்டல, அதுக்குள்ள மடியில விழுந்துட்டாரு – மயில்சாமி குறித்து எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்.

0
577
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும். இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு மயில்சாமி மாரடைப்பால் காலமாக இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று இசை கச்சேரி செய்து இருந்தார். இதில் மயிலசாமியும் கலந்துகொண்டு இருந்துள்ளார். விடிய விடிய சிவராத்திரி பூஜையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

- Advertisement -

சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மயில்சாமி குறித்து என்.எஸ்.பாஸ்கர் :

இந்த நிலையில் தான் மயில்சாமி மரணம் குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் அவர் கூறுகையில் “மயில்சாமி போன் செய்து தன்னை சிவராத்திரி கோவிலுக்கு வரியா? என்று கேட்டாராம். ஆனால் தனக்கு அந்த நேரம் படப்பிடிப்பு இருந்த காரணத்தினால் வரவில்லை என்று கூறவே மயில்சாமி 18ஆம் தேதிதான் என்று சொன்னாராம். ஆனால் அந்த நாளும் படப்பிடிப்பு இருந்த காரணத்தினால் வரவில்லை என்று கூற மயில்சாமி உடனே கோவிலுக்கு போகிறேன், சொல்ல வேண்டியது என்னுடைய கடமை, வேலை இருந்தால் பாருங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டாராம்.

-விளம்பரம்-

மேலும் மயில்சாமி மரணம் குறித்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர் “நான் 19ஆம் தேதி அதிகாலையில் 3 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். மயில்சாமியின் அந்த நேரத்தில் தான் வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்றவுடன் தனக்கு பசிக்கிறது என்று சாப்பாடு கேட்க பிள்ளைகளும் சாப்பாடு போட்டு கொடுத்திருக்கின்றனர். பின்னர் சாப்பாடு செஞ்சிலயே நிக்கிறது என கூறவே சிறிது வெந்நீர் வைத்து கொடுத்திருக்கின்றனர்.

அதற்கு பிறகு மயில்சாமியின் பிள்ளைகள் மேலே சென்று தூக்கிவிட்டனர். இந்நிலையில் மயில்சாமிக்கு சிறிது நேரம் கழித்து மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டிருக்கிறது. அவரது மனைவி போன் செய்து இதனை கூறினார்கள். பின்னர் மருத்துவமனைக்கு மயில்சாமியை அவரது மகன்கள் அழைத்து செல்லும் போதே தொரு மொக்கு திரும்புவதற்குள் அவரது மகன் மடியிலேயே சாய்ந்து விட்டாராம் என்று வருந்தி கூறினார் எம்.எஸ்.பாஸ்கர்.

Advertisement