Home Tour வீடியோ வெளியிட்ட மா க பா – ப்பா, எப்படி இருக்கு பாருங்க. இத்தனை வசதிகளா.

0
168
Makapa
- Advertisement -

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்தின் அழகிய வீட்டின் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை நிகழ்ச்சி, சீரியல்களும் தான் மக்கள் மத்தியில் பெரிதும் கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலில் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதிலும் ரியாலிட்டி ஷோக்களை வழங்குவதில் முதல் இடத்தில் விஜய் டிவி இருக்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு விஜய் டிவிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சிகளுக்கு இணையாக அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் மக்கள் மத்தியில் அதிகமாக இடம் பிடிக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் மிக பிரபலமான தொகுப்பாளராக திகழ்பவர் மாகாபா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

- Advertisement -

மா கா பா ஆனந்த்தின் சின்னத்திரை பயணம்:

இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். பின் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதற்கு பின் இவர் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் பல வருடமாக ஆங்கரிங் செய்து வருகிறார். இருந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர்- சீனியர், கிங்ஸ் சூப்பர் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள், ராமர் வீடு என விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களை மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

மா கா பா ஆனந்த் நடித்த படங்கள்:

இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் மாகாபா ஆனந்த் படு பேமஸ் என்று சொல்லலாம். மேலும், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் மாகாபா ஆனந்த் நடிகர் ஆனார். இதனை தொடர்ந்து இவர் நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு, நவரச மாணிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய பேச்சும், காமெடிகளும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது.

-விளம்பரம்-

யூடியூப் சேனல்:

தற்போது இவர் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது இவர் ஆங்கரிங் மட்டுமில்லாமல் சொந்தமாக யூடியூப் சேனலுக்கு நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் துபாய் சென்ற வீடியோவை பதிவிட்டிருந்தார். அது பயங்கரமாக ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது. இந்நிலையில் மா கா பா ஆனந்த் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

மா கா பா ஆனந்த் வீடு:

சமீபகாலமாகவே சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யூடியூபில் தனியாக சேனல் உருவாக்கி அதில் home tour என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மா கா பா ஆனந்த் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டினுடைய வீடியோ வெளியிட்டிருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மா கா பா ஆனந்த்திற்கு இவ்வளவு அழகான வீடா! என்றெல்லாம் வியந்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

Advertisement