நியூ இயர் : வெளிநாட்டில் பங்கு பெற்ற நிகழ்ச்சியின் நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இவருக்கு இவ்ளோ மவுசா ?

0
415
makapa
- Advertisement -

புத்தாண்டை கொண்டாட மா கா பா ஆனந்த் பிரான்சுக்கு பறந்து இருக்கிறார். ஆனால், அங்கு நடந்த நிகழ்ச்சியின் நுழைவு கட்டணத்தை கேட்டு பலரும் ஷாக் ஆகி விட்டார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக உள்ளது. இதில் தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் பல நாட்டு மக்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான தொகுப்பாளராக திகழ்பவர் மாகாபா ஆனந்த். தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் மாகாபா ஆனந்த் படு பேமஸ் என்று சொல்லலாம். விஜய் டிவியில் மிக பிரபலமான தொகுப்பாளராக திகழ்பவர் மாகாபா ஆனந்த். இவர் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் விஜய் டிவியில் வருடம் வருடம் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் மாகாபா ஆனந்த்.

- Advertisement -

மாகாபா ஆனந்த் நடத்தும் நிகழ்ச்சிகள்:

அதற்குப் பிறகு இவர் சின்னத்திரையில் பிரபலமாகி விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஆங்கரிங் செய்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர், கிங்ஸ் ஆப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள், ராமர் வீடு என விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் நடிகர் ஆனார்.

பாரிஸில் புத்தாண்டை கொண்டாடிய மாகாபா ஆனந்த்:

இதனை தொடர்ந்து நவரச திலகம், கடலை, மீசைய முறுக்கு, நவரச மாணிக் உள்ளிட்ட பல படங்களில் மாகாபா ஆனந்த் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து மாகாபா ஆனந்த்க்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனால் மாகாபா, விஜய் டிவி பிரபலங்கள் சிலருடன் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஈவண்ட் சென்றிருக்கிறார்.

-விளம்பரம்-

பாரிஸில் புத்தாண்டு கொண்டாடிய விஜய் டிவி பிரபலங்கள்:

பாரிஸில் வசிக்கும் தமிழ் சமூகத்தினருக்கு நடத்தப்பட்ட இந்த புத்தாண்டு விழாவில் ரோபோ ஷங்கர், குக் வித் கோமாளி பாலா, சூப்பர் சிங்கர் சாம் விஷால் உட்பட பல பேர் பங்கு பெற்று இருந்தார்கள். மேலும், அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று புத்தாண்டை பயங்கரமாக கொண்டாடி அதற்கான புகைப்படம் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்கள். அங்கு அவர் ஈபில் டவர் முன்பு நின்று நடனம் போட்ட வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Paris newyear event

பாரிஸ் புத்தாண்டு நுழைவு கட்டணம்:

இதில் இன்னொரு ஒரு ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், புத்தாண்டு நிகழ்வு நடக்கும் இடத்தின் நுழைவு கட்டணம் 85 யூரோ. அதாவது இந்திய மதிப்பில் 7200 ரூபாய். இதை கட்டி தான் விஜய் டிவி பிரபலங்கள் சென்றிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு மா கா பா ஆனந்த் குடும்பத்துடன் பாரிசுக்கு சுற்றுலா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement