டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்து அமைச்சர் பாராட்டியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருந்தார்.
டூரிஸ்ட் பேமிலி:
இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிவு:
மேலும், டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் மா. சுப்ரமணியன், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டி போட்டிருக்கும் பதிவுதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், டூரிஸ்ட் ஃபேமிலி படம் என் மனதை ரொம்பவே ஈர்த்தது. அக்கம் பக்கத்தில் இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும், பேரன்போடும் வாழும் வாழ்க்கை இந்த படம் போதிக்கிறது.
View this post on Instagram
படம் பற்றி சொன்னது:
படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இறக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்திருக்கிறார். இல்லை இல்லை வாழ்ந்தே இருக்கிறார் என்று சொல்லலாம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை காட்டும் ஒரு அற்புதமான படம். நேரம் கிடைக்கும்போது தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடையவன் நான். இன்று என்னுடைய குடும்பத்தினரோடு சென்று படம் பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனரிடமும் தொலைபேசியின் மூலமாக என்னுடைய மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பரிமாறிக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

கதைக்களம்:
படத்தில் சசிகுமார் தன்னுடைய மனைவி சிம்ரன் மற்றும் இரண்டுமகன்களுடன் இலங்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். இதனால் இவர் இலங்கையில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக இந்தியா வருகிறார். ராமேஸ்வரம் வந்த இவரை சிம்ரன் அண்ணன் யோகி பாபு தான் சென்னைக்கு அழைத்து வந்து கேசவ நகரில் குடி வைக்கிறார். இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளத்தையே மறைத்து சசிகுமார் குடும்பம் வாழ்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் போலீஸ் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் சசிகுமார் குடும்பம் சிக்குகிறது. இந்த சவால்களில் இருந்து சசிகுமார் தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? அதனால் என்னென்ன பிரச்சனை வருகிறது? இதையெல்லாம் அந்த குடும்பம் சமாளித்து வந்ததா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.






