மாமன்னன் படத்தின் 50வது நாள் விழாவில் படக்குழுவிற்கு கொடுக்கப்பட்ட சிலையில் என்ன இருக்கு பாருங்க.

0
1606
- Advertisement -

மாமன்னன் படத்தின் 50வது நாள் கொண்டாட்ட விழாவில் படக்குழுவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கி பரிசின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.

-விளம்பரம்-

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் தொடர்ந்து வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

மாமன்னன் படம்:

இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் இருக்கிறார்கள். இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை கூறி இருக்கிறது. அது மட்டும் இயக்குனர் இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஓடிடியில் வெளியான படம்:

அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் கிருத்திகா, உதயநிதியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். பின் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து மாமன்னன் படக்குழுவினர் வெற்றி விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதில் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டு பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

உதயநிதி வழங்கிய சிலை:

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்திருக்கும் பரிசு தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, மாமன்னன் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பறக்கும் பன்றி குட்டி போல் இருக்கும் சிறிய சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் வருகிறது.

Advertisement