சிம்புவ பத்தி மட்டும் பேசுறீங்களே, கல்யாணியின் Transformation பத்தி தெரிஞ்சா ஷாக்காவீங்க. இதோ புகைப்படம்.

0
999
kalyani
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவில் கூட எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்புவும் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைபடம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் சிம்புவின் பிட்னஸ்ஸை பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் சிம்புவின் Transformation பற்றி பேசும் அனைவரும் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள கல்யாணியின் Transformation பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : Bjp குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா ? வைரலாகும் வீடியோவால் திட்டி தீர்க்கும் ஆதரவாளர்.

- Advertisement -

கல்யாணி பிரியதர்ஷன் முதலில் பாலிவுட் திரைப்படத்தில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக திரைப்படத்தில் பணி புரிந்தார். பின் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இவர் தமிழில் அறிமுகமானது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ ‘ படத்தின் மூலம் தான். இப்படி ஒரு நிலையில் இவரது சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதில் படு குண்டாக இருக்கும் கல்யாணி பின்னர் எப்படி இவ்ளோ பிட்டாக மாறி இருக்கிறார் என்று பலரும் வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement